257 எள், தட்டை, கருப்புக்கட்டி, பனைவெல்லம் முதலிய வியாபாரம் நடைபெறுகிறது. தீவுகள் உள்பட இவ் வட்டத்திலுள்ள அனைவரும் இங்கே பொருள்களை வாங்கு கிறார்கள். தேங்காய் வியாபாரம் இங்கு பெரிய அளவில் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் சந்தை கூடுகிறது. இங்கு மலிந்தவை கத்தரிக்காய், கீரை, மீன், அரசாங்க அலுவலகங்கள் இராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய இரு வட்டங்கள் அடங்கிய இராமந தபுரம் கோட்ட அலுவலகம் இங்கு இருக்கிறது. இராமநாதபுர மாவட்டம் ஏற்படுமுன்பும் இங்கு வெள்ளைக்கார கலெக்டர்கள் இருந்தார்கள். முனிசீபின் நீதிமன்றம் மாவட்ட மருத்துவமனை, மாவட்ட மருத்துவர் அலுவலர் அலுவலகங்களும் இன்னும் பல அலுவலகங்களும் இங்கு உள்ளன. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் இது வடக்கே இராஜ சிங்கமங்கலம் ஒன்றியம், கிழக்கே கடலும் மண்டபம் ஒன்றியமும், தெற்கே திருப் புல்லணை ஒன்றியம், மேற்கே போகளூர் ஒன்றியமும் சூழ 102 சதுர மைல் பரப்பில் அமைந்து, 40.000 மக்களை உடையது. ஒன்றிய அலுவலகம் இராமநாதபுரம் இரயில் நிலையத்துக்கு அருகே இருக்கிறது. இராமநாதபுரம் (மேற்கு), தேவிபட்டினம் பிர்க் காக்களைச் சேர்ந்த 25 ஊராட்சி மன்றங்கள் இவ்வொன் றியத்தில் அடங்கியுள. பேரூராட்சி ஒன்றும் இல்லை. இராமநாதபுரம் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டைக் கண்மாய் இரண்டும் இவ்வொன்றியத்தில் உள்ளன. இக் கண்மாய்களின் பாசனப் பகுதியில் மட்டும் இரண்டு
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/259
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை