24 (கல்லல் ஒன்றியம்) செம்பொன் மாரி (சண்முகநாதபுரம் அருகே, திருவாடானை வட்டம்), இவை பொன்வகை களைக் குறிப்பன. பைம்பொன் - பயிம்பொன் - பசும் பொன் (பச்சைப்பொன்). சுண்ணாம்புக் கல் : சிமிண்டுத் தொழிலுக்கு உதவும் சுண்ணாம்புக் கற்கள். ஆலங்குளத்திலும் கள்ளம் நாயக்கப்பட்டியிலும் அருப்புக்கோட்டை வட்டத்துப் பாலநந்தம், பாண்டங்குடியிலும் இரண்டு கோடி டன் இருப்பதாக மதிக்கப்படுகிறது. முதுகுளத்தூர் வட்டம் பேரையூர், அவத்தாண்டை, கோக்கடிப் பகுதிகளில் சிறு அளவில் ஜிப்சம் கிடைக்கிறது. கீழக்கரை, வாலி நோக் கம் ஆகிய ஊர்களிலும் ஜிப்சம் கண்டு பிடிக்கப் பட்டிருக் கிறது. இதுவும் சிமிண்டுத் தொழிலுக்குப் பயன்படும் பொருளாகும். சுண்ணாம்புக் கற்கள் கிடைப்பதால் துலுக்கப்பட்டி யிலும் ஆலங்குளத்திலும் சிமிண்டு ஆலைகள் தொங்கப் பெற்றுள்ளன. சுண்ணாம்புக் கற்கள் பிளீச்சிங் பவுடர், கால்சியம் கார்பைடு ஆகியவற்றின் உற்பத்திக்கும் உதவுகின்றன. மஞ்சள் காவி: சிவகங்கைக்கும் மானாமதுரைக்கும் இடைப்பட்ட முட்காடுகளில், காட்டூரணி போன்ற பகுதிகளில் வெள்ளைக் களிமண் இருப்பதாகத் தெரி கிறது. பூவந்திப் பகுதியில் ஒருவகை Lead' உளது. சிவகங்கை நகர் எல்லையில் 28 லட்சம் டன் மஞ்சள் காவி முதலியன உள்ளன. இவை Indian Red, yellow Distemper, Maroon Distemper முதலிய எண்வகை வண்ணங்களில் பெயிண்டு' செய்ய உதவுமென ஜெர்மன் அறிஞர் கூறியுள்ளனர். கிராபைட்: பூவந்தி அரசனூர் சிவகங்கை சிவகிரி சேத்தூர்ப் பகுதிகளில் கிராபைட் கிடைக்கிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை