259 நவக்கிரகங்களைக் குறிக்கும் ஒன்பது தூண்கள் இவ் வூரில் கடலுக்குள் உள்ளன. இதனால் இவ்வூருக்கு 'நவபா சானம்' என்ற பெயரும் உண்டு. இராமபிரான் இங்கு வந்து வழிபட்டபோது இத்தூண்களை நிறுத்தியதாகக் கூறுவர். பயபக்தியுளை இந்துக்கள் இவ்வூரை, காசி யைப் போலவே புனிதமாகக கருதுகிறார்கள். இதனால் இவ்வூரில் வட இந்தியர்களும் பல மன்னர்களும் சமூகத்தினரும் சத்திரங்கள் நிறுவியுள்ளனர். பல் கிரகசாந்தி செய்ய விழைவோரும் இராமேசுவரப் பயணிகளும் இங்கு வந்து சக்கரைத் தீர்த்தத்தில் நீராடு கிறார்கள். இந்தத் தீர்த்தத்தில் நீராடிய பிறகே கடலில் நீராடவேண்டுமென்பது மரபு. கடலை அசுத்தம் செய் வது குற்றம். எனவே கடலில் நீராடுமுன் தூய்மையாக இருக்க வேண்டு மென்று நம் முன்னோர் இவ்வாறு செய் தார்கள். ஓட்டமும் நடையுமாயிருக்கிற இந்நாளில் யார் இதையெல்லாம் பொருட்படுத்துகிறார்கள்? மைசூர் மகாராஜா போன்றவர்கள் விதிவிலக்கு. ஊர் ஓரத்தில் உலகம்மன் கோவில் இருக்கிறது. தில் கோவில் கொண்டுள்ள அம்மன் தானே தோன் றியது என்பர். எனவே இது தேவி பிறந்த ஊர், தேவி பட்டினம் என்பர். இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடை யாது. அபிஷேகத்தைத் தாங்கக்கூடிய பொருள்களால் அது உருவாகாததே காரணம். இந்த அம்மன் மிகப் பழமையானது; தொன்று தொட்டு அந்தணர் உள்பட பல இனத்தார்க்கு குலதெய்வம். இக்கோவிலில் மாணிக்கவாசகர் திரு உருவம் இருக்கிறது. திலகேசுவரர் கோவிலும் இவ்வூரில் புகழ் பெற்றது. விசுவநாத நாயக்கன் - மகனான குமார கிருஷ்ணப்பன் காலத்தில் கண்டி (சிங்கள) மன்னனை அடக்க, பாளையக்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/261
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை