264 கட்டிடங்களாலும் பெரிய மாளிகைகளாலும் புகழ் பெறுவதைவிட, பெருமக்களாலும் சான்றோர்களாலும் ஊர்கள் புகழ் பெறுகின்றன. சான்றாக, சிற்றூராகிய சேவா கிராமமும் பிற சிறப்புக்கள் இல்லாத போர் பந்தரும் பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறுவது போல், காந்தி மகானால் நிலைத்த புகழ் பெற்றிருக் கின்றன. இவ்வாறே மணிவாசகப் பெருமானால் புகழ் பெற்றதலம் திருஉத்தரகோச மங்கை. பன்னிரு திருமுறைகளில் தலை சிறந்த பாக்கள், மணிவாசகர் பாடிய பக்திப் பாடல்களே. அவருக்கு மூலத்தானமுமே உற்சவ உருவமும் இங்கு உள்ளன. மார்கழியில் அவ ருக்குத் திருவிழா எடுக்கப் பெறுகிறது, அவருக்கு அஷ்டமாசித்தியான இடம் இதுவே. இச்சிற்றூர் இராமநாதபுரத்துக்குத் தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ளது. உத்தரகோச மங்கை இரயில் ஹால்ட் என்று சிறு நிலையம் உளது; ஆனால் அங்கிருந்து, கோவிலுக்குச் செல்ல ஒரு வசதியும் இல்லை. இவ்வூர் ஒரு காலத்தில் பாண்டியர் தலைநகரமா யிருந்தது என்பர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர் கல்வெட்டுக்கள் இவ்வூர்க் கோவிலில் உள்ளன. 'மணவை' என்ற பெயரும் இவ்வூருக்கு வழங்கி வந்திருக்கிறது. இலங்கையை ஆண்ட பரராஜசிங்கம் தாயார் பிறந்த ஊர் இதுவே. கோவிலின் பெயர் 'மங்களேசுவர சுவாமி' கோவில், இதன் பரப்பு 15 ஏக்கர் (மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 25 ஏக்கர். தில்லை நடராசர் சோவில் 40 ஏக்கர்.) இக்கோவில் கோபுரத்தின் உயரம் 124 அடி. ஸ்ரீவில்லிபுத்தூர்-192 அடி).
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/266
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை