பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 நாகர்கோவில் பகுதியில் இருப்பதாயும் கொள்ளுகிறார்கள். சொல்லிக் மங்களேசுவரசுவாமி கோவில் கோபுர வாயிலில் சுரேஷ் என்ற வடநாட்டு முனிவர் சில ஆண்டுகளாகத் தவமிருந்து வருகிறார். இவர் கல்வியும் இறைப்பற்றும் நிரம்பியவர். உத்தரகோச மங்கையிலிருந்து கீழக்கரைக்குச் செல்லும் வழியில் ஏர்வாடி என்னும் ஊரில் ஒரு தாக்கா இருக்கிறது. இது முன்னாளில் சுப்பிரமணியத்தலமாக இருந்தது என்பர். ஏறுபடி என்ற முருகன் தலமாக து இருந்தது. முருகன் மீனாக வந்து பரதவர் வலையில் அகப்பட்டு கரையேறிய இடம் ஏறுபடி ஆயிற்று. இன்று கத்தோலிக்கராகவுள்ள இப்பரதவர் வலையை இழுக்கும் போது ஓவேலா காவேலா என்று வேலவன் பெயரைச் சொல்லியே இழுக்கின்றனர். கோவில் மூலையில் வைக்கும் கரணைக்கால்கள் உத்தர கோசமங்கைக் கோவிலில் புதைத்து வைக்கப்பட்டிருக் கின்றனவாம். வெடித்து விடாமல் இருப்பதற்காகவும் பிற்காலத் தேவைக்காகவும் இவ்வாறு செய்வது மரபு. இவை ஒவ்வொன்றும் பல்லாயிரம் ரூபாய் பெறும் என்பர். திருப்புல்லணை: இராமர், புல்லைத் தலையணையாக வைத்து உறங்கிய இடம். எனவே திருப்புல்லணை என்பதே இவ்வூரின் சரியான பெயர். இதைத் தவறாக திருப்புல்லாணி என்று பலர் எழுதி வருகின்றனர். வடமொழியில் இவவூருக்கு தர்பசயனம் என்ற பெயர் உண்டு. இவ்வூர் இராமநாதபுரத்திலிருந்து ஏழுமைல் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள ஜகந்நாதப் பெருமாள் கோவில் திருமங்கையாழ்வார் பாடல் பெற்றது. இக்கோவிலில்