பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269 14-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் உள்ளன. 64 மனைவியர்களுக்கும் 64 அறைகள் வைத்து சேதுபதி ஒருவர் 18-ஆம் நூற்றாண்டில் இங்கு கட்டிய அரண் மனையின் பாழடைந்த பகுதிகளைக் காணலாம். ஜகந்நாதப் பெருமாள் கோவிலிலுள்ள இராமா விக்ரகத்திற்கு, இரத்தினாகரம் கடலில் கிடைத்த விலை மிக்க மணிகளால் செய்த காதணிகளை அணிவிக்கின்ற னர். இவற்றை பாஸ்கர சேதுபதி வழங்கியுள்ளார். விபீடணனும் சமுத்திர ராஜனும், இராமபிரானிடம் இங்கு சரணடைந்ததாக இவ்வூர்த் தலபுராணத்தில் கூறப்படுகிறது. கடல்கோளுக்குமுன் தனுஷ்கோடியில் இருந்த ராமர் விக்கிரகம் இக்கோவிலில் வைத்து வழிபடப் பெறுகிறது. திருக்குறள் அதிகாரங்களைக் கட்டளை கலித்துறைச் செய்யுட்களால் பாடி இங்கு கோவில் கொண்டுள்ள தெய்வச்சிலைப் பெருமாள் பேரில் ஒரு புலவர் பாமாலை பாடியுள்ளார் 'திருப்புல்லணைமாலை' என்பது இதன் பெயர். திருப்புல்லணை இறைவனுக்குத் 'தென்னக் தமிழான்' என்ற பெயர் உண்டு. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராயிருந்த டி. சி.சீனிவாசன் ஐயங்கார் (1876-1951) இவ்வூரினர். என்னும் இவ்வூரருகே பால்குளம், மோர்க்குளம் ஊர்கள் உ.மோர்க்குளத்தில் உப்பளம் இருக்கிறது. பெரியபட்டினம்: கடலோரமாக உள்ள ஊர். புதை பொருள் ஆராய்ச்சிக்குரியது. மீன் பிடிப்பது இங்கு பெரிய தொழில். மீனவர்களும் படகோட்டிகளும் செழிப்பாக வளர்ந்து தென்னந் தோப்புகளின் உரிமை யாளராகி மேலும் வளமாக உள்ளனர்.