271 . தீவின் சில பகுதிகளில் கருவாவல், சீலா, விரால், சுவைமிகுந்த வெள்ளை வௌவால் மீன்கள் பிடிக்கப் படுகின்றன. உச்சிப்புளிப் பகுதியில் பனந்தும்பு மட்டையை நாராக்கி வெளியூர்களுக்கு அனுப்புகிறார் கள். கயிற்றுப் பொருள்கள், பனை ஓலை,ஈக்கி ஆகிய வற்றையும் வெளிநாடுகளுக்கு விற்கிறார்கள். இவ்வொன்றியத்தில் முஸ்லிம்களும் சில ஊர்களில் களும் உள்ளனர். கிறித்தவர் பெரும்பான்மையோராக இவ்வொன்றியத்தில் சேர்ந்திருந்த இராமேசுவரம், ஒரு நகரியமாக இருந்து வருகிறது. தனுஷ்கோடி அழிந்து விட்டது. இப்போது 29 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. யாவும் சிற்றூர்களே. அழகன்குளம்: இராமநாதபுரத்திலிருந்து 9 மைல். இவ்வூரில் மருதுபாண்டியர் கட்டிய விநாயகர் கோவிலும், அவரது தாயார் பெயரால் அமைந்த ஆனந்தாயிச் சத்திரம் (இன்று சிவகங்கைச் சத்திரம் என விளங்குகிறது) முதலியனவும் உள்ளன. கோட்டை மேடு உளது. பழங்காலத்துச் செங்கல் கற்கள், பட்டா நிலங்கள் தோண்டும்போது எடுக்கப் பட்டுள்ளன இங்கு அழகேசராஜன் ஆண்டதாகக் கூறுவர். நாலு மந்திரக்கும்மி என்ற கதையில் இதைப் பற்றிக் கூறப்படுகிறது. ஆற்றங்கரை: வைகையாறு இங்கு கடலுடன் கலக்குகிறது. பரிபாடல் இவ்வூரை விவரிக்கிறது. உப்பு நீர், வாழக்காய், ஊத்துக்காய் ஆகியவற்றுக்கு இவ்வூர் பெயர் பெற்றது. வேனிற்காலத்தில் ஆற்றுநீர் சுவை யாக இருக்கும். . என்மனம்கொண்டான்: இராமநாதபுரத்துக்கும் உச்சிப் புளிக் கு ம் இடைப்பட்டது. இங்கு முஸ்லிம்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/273
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை