பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 . கோடி ரூபாய் முதலீடு போட்டுத் தோண்டியெடுப்ப தற்கு வேண்டும் அளவுக்கு, கையிருப்பு இல்லை என்ற காரணத்தால் அதை எடுக்கும் வேலை மேற் கொள்ளப் படவில்லை. செந்நிறக் கற்பாறைகள்: அருப்புக் கோட்டை அருகே இவ்வகைப் பாறைகள் இருக்கின்றன. கல் தூண்கள்: கோவில்களில் தூண்களாக நிறுத்து வதற்குரிய கற்களும் விக்கிரகங்கள் செய்வதற்கு ஏற்ற கற்களும் பிள்ளையார்பட்டியில் கிடைக்கின்றன. ப்ளம்பாகோ: திருச்சுழிக்கு அருகே யுள்ள பந்தல் "ப்ளம்பாகோ' குடியில் கிரிஸ்டலைன் லைம்ஸ்டோனில் என்னும் அரிய பொருள் இருப்பதாகத் தெரிகிறது. வியப்பான பாறைகள்: திருப்பத்தூர் வட்டம் பூலாங்குறிச்சியிலுள்ள காஞ்சாத்து மலை இராமநாதபுர மாவட்டத்திற்கும் திருச்சி மாவட்டத்திற்கும் முன்னாள் புதுக் கோட்டைத் தனி அரசுக்கும்) எல்லையாக அமைந் திருக்கிறது. இங்கு விதவிதமான பாறைகள் 40 ச.கி.மீ. பரப்பில் இருக்கின்றன. பாறைகளைக் குறித்து ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு (Petrologists) இது து ஏற்ற இடம். பாறைகள் ஒன்றுக்கொன்று வழுக்கி அப்படியே இருந்திருக்கக்கூடிய அடையாளங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர். கடற்பாறை (Coral Reefs) : தீவுகளைச் சுற்றியும் கடலோரத்திலும் இப்பாறைகள் உண்டாகின்றன (formed). இவை உண்டாவதற்கு 68 முதல் 74°F வெப்பம், தெளிந்த நீர் ஆறுகள் வந்து சேரா இடம், படிவங்கள் (Sediments) சேரா இடம் முதலிய நிலைகள் வேண்டும்.