பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 இனி, இவ் வொன்றியத்தில் இருந்ததும் 1964-ஆம் ஆண்டில் புயலால் பெரும்பாலும் அழிந்துவிட்டதுமான தனுஷ்கோடியைப் பற்றிக் கூறுவோம். தனுஷ்கோடி: இராமேசுவரம் தீவின் தென்கிழக்கு எல்லை. இராமேசுவரத்திலிருந்து 20 கி.மீ. வில்லின் நுனியை இராமபிரான் இங்கு ஊன்றிய தால் இப் பெயர் வந்ததென்பர். தனுஷ் -வில். கோடி- முனை. .. - இங்கு ஆண் கடலும் பெண் கடலும் சந்திப்பதாகச் சொல்லுவார்கள். நீடுதனுக் கோடியினை நினைந் தாலும் புகழ்ந்தாலும் நேர் கண்டாலும் வீடு பெறல் எளிதாகும்" என்பது நிரம்ப வழகிய தேசிகர் அருளிய சேது புராணம். . என்று இங்கு நீராடுவது புண்ணியமான கடமை இந்துக்கள் கருதுகின்றனர். கங்கைக் கரையில் உயிர் நீப்பதும், நர்மதைக் கரையில் நோன்பு இருப்பதும், குருக்ஷேத்திரத்தில் பிறருக்கு அன்பளிப்பாக எதை யாவது வழங்குவதும் புண்ணியமான செயல்கள் என்றும் இம் மூன்றையும் ஒருங்கே செய்து பேறுபெறக்கூடிய இடம் தனுஷ்கோடிதான் என்றும் இந்துக்கள் நம்பு கின்றனர். இலங்கையினின்றும் மீண்ட இராமன் இங்கே தான் நீராடியதாக ஐதிகம். . அமாவாசை நாட்களில் குறிப்பாக ஆடி, தை மாவாசைகளில் பல்லாயிரம் பேர் நீராடுவது வழக்கம். ப்போதும் தொல்லைகளைப் பொருட் படுத்தாமல் பலர் இங்கு செல்லுகிறார்கள். சொந்த ஜீப் அல்லது வேன் இருந்தால்தான் போய்வர இயலும்.