283 மீன் பிடிப்பது இந்த ஊரின் ஒரு முக்கியமான தொழில், சங்கு எடுப்பதும் படகு ஓட்டுவதும் இங்குள்ள வர்களின் ஏனைய தொழில். இத்தொழிலில் முஸ்லிம்கள் சிறந்து விளங்குகிறார்கள். அவர்கள் பல்லாயிரம்பேர் இங்கு உள்ளனர். முத்துவாணிகம் எப்போதுமே இவ் வூரில் ஒரு பெரிய தொழிலாக இருந்திருக்கிறது. ஒரு தெருவின் பெயரே முத்துச் சாவடி. இந்தத்தீவில் புளி நிறையக் காய்க்கிறது. இராமேசுவரம் புளி இரண்டு பங்கு புளிப்புடையது. எனவே மக்கள் இந்தப் புளியை விரும்பி வாங்குகிறார்கள். கடலில் கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு வேலைப்பாடு நிறைந்த பல பொருள்களைச் செய்வதில் இத்தீவு மக்கள் சிறந்து விளங்குகிறார்கள். மணல்மேடுகளில் வெண்தாழை மரங்கள் ஏராள மாக உள்ளன. வெண்தாழம்பூ இப்பகுதியில் நிறைந்தும் மலிவாகவும் கிடைக்கிறது. தனுஷ்கோடி அழிந்தபிறகு இங்கிருந்தே தலைமன்னா ருக்குக் கப்பல் செல்லுகிறது. 1966 முதல் இங்கு ஒரு நகரியம் ஏற்பட்டிருக்கிறது. பரப்பு 20 சதுரமைல். ஊர்கள் 13, மக்கள் தொகை 11,000. இத்தீவில் கேட்கும் ஒலி - பாரதநாட்டு மொழிகள் யாவும். ஏற்றுமதி-- தீர்த்தம், தேங்காய், புளி, சரளைக்கல், சோழி, சங்கு,மீன். - இருப்பவை -50 ஜட்கா, ஏராளமான சத்திரங்கள். இருப்பவர்--200 புரோகிதர், 1, 000 மீனவர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/287
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை