பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 புராணக்குறிப்புகள் இராவணன் முதலியோரைக் கொன்றதால் ஏற்பட்ட பிரும்மகத்தி தோஷத்தை விலக்கும் பொருட்டு இராம பிரான் இங்கு சிவலிங்கப்பிரதிஷ்டை செய்தார். இங்கு லிங்கம் ஸ்தாபிக்க அநுமார் வடக்கிலிருந்து ஒரு லிங்கம் கொண்டு வந்தார். அவர் கொண்டு வருவதற்குள் சீதா பிராட்டி ஒரு லிங்கத்தை அமைத்தார். அநுமார் கொண்டுவந்த லிங்கத்துக்கு விஸ்வலிங்கம் என்றும். காசுவிஸ்வ நாதர் என்றும் பெயர். சீதாதேவி மணலில் பிடித்த லிங்கமே இராமேசுவரர், இராமலிங்கர், இராம நாதர். அதனாலேயே இவ்வூருக்கு இராமேசுவரம் என்று பெயர் வந்தது. கந்தமாதன பர்வதம்: சீதாப்பிராட்டியாரைத் தேடிவந்த இராமபிரான் ஏறி நின்று இலங்கையைப் பார்த்த இடம். பெருமாளின் திருவடிகள் பட்ட மண்ணைப் பேணிக்காத்து தரிசனத்திற்கு வைத்திருக் கிறார்கள். இந்த கந்தமாதன பர்வதமான. மணல் மலை யைக் கண்டதும் இராமர் பாதங்களைச் சேவிக்கும் பக்தர்கள் மனம் புல்லரிக்கிறது. வரலாறு இக்கோவில் இலங்கை அரசர் ஒருவரின் முயற்சி யால் கட்டத் தொடங்கப்பட்டது என்றும், அது கட்ட 350 ஆண்டுகளாயிற்று என்றும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டிடவேலை முடிவடைந்தது என்றும் கூறுவர். பல தலைமுறைகளாக இலங்கை அரசர்களாலும், சேதுபதிகளாலும், தனிப்பட்ட பலராலும் இந்தக் கோவிலின் பல பகுதிகள் கட்டப்பட்டன. 12-ஆவது நூற்றாண்டிலிருந்தே இந்தக் கோவிலின் வேலைகள் தொடங்கியதாகச் சிலர் கூறுவர். கட்டிட