பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 இக்கோவிலை முகமதியர்கள் அழிக்க வந்ததாகவும் அப்பொழுது இந்தக் கல் நந்தி புல் தின்றதாகவும் அதைக்கண்டு அதிசயப்பட்டுக் கோவிலை அழிக்காமல் விட்டு விட்டதாகவும் கூறுவதுண்டு. விபீடணன் பிரதிஷ்டை செய்ததும் படிகத்தினால் ஆனதுமாகிய ஜோதிர்லிங்கம் இக்கோவிலில் இருக்கிறது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர் லிங்கங்களுள் இது ஒன்றே தென்னிந்தியாவில் இருக்கிறது. வழிபாட்டு முறைகள் : இக்கோவிலில் நாள்தோறும் 16 வகை அபிசேகங் கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் கங்கை நீரைக் கொண்டு இராமநாதரை நீராட்டுகின்றனர். பிற தலங்களில் பள்ளி அறைக்குப் பாதத்தை மட்டும் கொண்டு போவார்கள். இங்கு இறைவனின் திருவுருவத்தையே கொண்டு போகிறார்கள். இவ்வாலயத்தில் தினசரி நடைபெறும் பூசை முறை களும் மற்றுள்ள தலங்களைப் போலன்றிச் சற்று மாறு பாட்டையும் விரிவான நடைமுறையையும் கொண்டது. முதலில் வேதங்கள் ஓதப்படுகின்றன. அதனையடுத்துத் தேவார, திருவாசகத் தீந்தமிழ்ப் பாசுரங்கள் முழங்கு கின் றன. தொடர்ந்து மேளங்கள் ஒலிக்கின்றன. இத்த கைய முறைகள் மக்களைப் பக்திட்பரவசப்படுத்துவன. அர்த்தசாமப் பூசை முடிந்ததும் ஸ்ரீ இராமநாத சுவாமியைப் பள்ளியறைக்கு எடுத்துச் செல்லும் பொழுது, பாஸ்கர சேதுபதி தாமே, தங்கத் தீவட்டி தூக்கி, பள்ளியறையில் இறைவனைவிட்ட பிறகு கால வழிபட்டு இரவில் கோவிலைக் காக்கும் பைரவரை பொறுப்பைக் காலபைரவரிடம் ஒப்புவித்து, தீர்த்தக்