293 சம்பா கரைக்கு வந்து கோவிலில் கொடுக்கப்படும். சாதம், சுண்ட வற்றல் குழம்பு, இரண்டு வடை ஆகிய விட்டு பிரசாதங்கள் சாப்பிட்ட பிறகு கோவிலை வெளி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். சேதுபதிகளுடைய பக்திச் சிறப்பை இது உணர்த்தும். இப்போது பட்டத்திலுள்ள இராமநாத சேதுபதியும் இவ்வாறே இராமநாதசுவாமியிடத்தில் அளவற்ற பகதி கொண்டிருக்கிறார். . மண்டபம், பாம்பன், இராமேசுவரம் ரயில் நிலையம், இராமேசுவரத்தில் சேதுபதியின் மாளிகை, இராமநாத சுவாமி சந்நிதி ஆகிய ஐந்து இடங்களில் சேதுபதிக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. இராமேசுவரம் கோவிலுக்குப் பல ஊர்களை வழங்கியுள்ள சேதுபதிகளுக்கு நன்றி கூறும் வகையில் இந்த வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. திருவிழாக்கள் : மாசி மகம், மாசி சிவராத்திரி, வைகாசி வசந்த உற்சவம் மூன்றும் இங்கு பெரிய விழாக்கள். மாசி சிவராத்திரி 12 நாட்களுக்கு நடைபெறும். திருவாங்கூர் மகாராஜாவின் மண்டகப்படியாக இரண்டாம் நாள் தங்கரதமும், ஆறாம் நாளில் நடைபெறும் சேதுபதி மண்டகப்படியும் காணத்தக்கவை. ஆடித்திருக்கல்யாண விழாவும் ஆனி மாதத்தில் இராமலிங்கப் பிரதிஷ்டை விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மாதந்தோறும் நடைபெறும் திருவிழாக்கள், 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாக்கள், வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் திருவிழாக்கள் இவ்வாறு எத்தனையோ திருவிழாக்கள் இங்கு நடைபெறு கின்றன. இத்திருவிழாக்களில் தங்க கேடகங்களில்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/295
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை