பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307 ஒன்றியம் இது. இவ்வொன்றியத்தில் முதுகுளத்தூர் பேரூராட்சியும் 44 ஊராட்சி மன்றங்களும் உள்ளன. முதுகுளத்தூர் இது இவ்வட்டத்தின் தலைநகராகவும் ஒன்றியத்தின் தலைநகராகவும் இருக்கிறது. அரசாங்க அலுவலகங்கள் ஏராளமாக உள்ளன. பரமக்குடியிருந்து 25 கி.மீ. தொலைவில் இவ்வூர் ருக்கிறது. ஊரின் பிறிதொரு பெயர் தென் குழந்தபுரி. தெற்கே கடலாடி, மேற்கே கமுதி, கிழக்கே கீழக்கரை ஆசிய ஊர்களுக்குச் சாலைகள் உள்ளன. ஊருக்கு வடக்கேயுள்ள குண்டாற்றைக் கடந்து சென்றால், பரமக் குடி அபிராமம் முதலிய இடங்களுக்குச் செல்லலாம் இங்கிருந்து கடற்கரை 12 மைல் தொலைவு. முதுகளத்தூர் என்பதே இதன் சரியான பெயர் என்று சிலர் கூறுவர். ஆதாரமாக களக்காடு, பொன் விளைந்த களத்தூர், களப்பாழ், வைகளத்தூர் என்ற ஊர்ப் பெயர்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இவ்வூர் ஆப்ப நாட்டின் தலைநகராக இருந்தது. ஆப்ப நாட்டிலுள்ள ஆப்பனூர் புகழ் பெற்ற சிவத்தலம். அங்குள்ள கிணற்று நீர் சிறந்த தீர்த்தம் என்றும் அதை வீட்டுக்குக் கொண்டு போக இயலாது என்று கூறுவர். ஆப்பனூரில் கோவில் கொண்டிருக்கும் இறைவனின் பெயர் - ஆப்பனூர்க் காரணர். க்காரணத்தால் இவ்வட்டத்து மறவருக்குக் காரண மறவர் என்று பெயர் உண்டு. ஆப்ப நாட்டு மறவர் சங்கக் கட்டிடத் தில் உயர்நிலைப் பள்ளியும் ஊர் நடுவே கிழவன் சேதுபதி திருப்பணி செய்த சிவன் கோவிலும் உள்ளன. பெரிய புராணத்தில் வைகைக்கரை ஆப்பனூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது இதையே என்பர்.