2. வரலாறு ம் காட்டாக ராமநாதபுர மாவட்டம் தொன்மையான வரலாற்றுப் பெருமை உடையது. முற்காலப் பாண்டி யரின் வரலாற்றில் இப்பகுதிக்குச் சிறப்பான இடம் உண்டு. தமிழர் வீரத்தின் எடுத்துக் ருக்கும் மறவர்களும், தமிழர் வாணிபத்தின் தூதுவர் களாக விளங்கும் பலவேறு சமூகங்களும் இம் மாவட் டத்தில் தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனர். ம். தொண்டி முதலிய துறைமுகங்கள் நெடுங்காலமாக கடல் வாணிபத்தில் ஏற்றம் பெற்றிருக்கின்றன. இம் மாவட்டத்தின் கடற்கரையில் முத்துக் குளித்தவைப் பற்றி மார்க்கோ போலோ எழுதியுள்ளார். Batala என்னும் இடத்தில் பெரிய அளவில் மீன்கள் பிடிக்கப் பட்டதைக் குறித்து ஐரோப்பிய ஆராய்ச்சியாளர் பலர் எழுதியுள்ளனர். இராமாயண காலம் தொட்டு இந்தியா இலங்கை இரு நாடுகளின் வரலாற்றிலும் இம்மாவட்டம் முக்கியத துவம் பெற்றிருக்கிறது. பல்லவர் பல்லவர் தொடர்பு இம்மாவட்டத்திற்கு இருந்தது என்பது பல கல்வெட்டுக்களிலிருந்து உறுதிப்படுகிறது. குன்றக்குடியிலும் பிள்ளையார் பட்டியிலும் நெற்குப்பை மகிபாலன்பட்டிச் சாலையிலுள்ள பூங்குன்றத்திலும் குடைவறைக் கோவில்களும், பல்லவர் கல்வெட்டுக்களும் -
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/31
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை