310 பேர் போன உச்சிநத்தம். பெரண்டடிக்கும் கலிங்குத் தண்ணி. ஏர்வாடி: முஸ்லிம்கள் மிகுதியில் வாழும் ஊர். இங்குள்ள தர்கா தென்னிந்தியாவின் பெரிய பள்ளி வாசல்களுல் ஒன்றாகும் வெளி நாடுகளில் உள்ளவர்களும் ஏர்வாடி தர்காக்கு வந்து பயபக்தியுடன் பாத்திகா ஓதுவார்கள். ஆண்டுதோறும் வருபவர்களும் உள்ளனர். . கடுகு சந்தை : சேதுபதிகளுடைய சத்திரத்தால் புகழ் பெற்றது. சாயல்குடி: இது ஒரு சிறு ஜமீனாக இருந்தது. வெளி நாட்டு வாணிகத் தொடர்புடைய முஸ்லிம்கள் இங்கு மிகுதியாக வாழுகின்றனர். கீழக்கடாரம்: மலாய் நாட்டிலுள்ள Kedah கடாரம் என, தமிழ் இலக்கியங்களில் வழங்கப் பெற்றிருக்கிறது. எனவே கடலோரமாயுள்ள இவ்வூர்ப் பெயர் ஆராய்ச்சிக் குரியது. சிக்கல்: இது ஒரு முன்னேற்றமான சிற்றூர். ப. கீரந்தை : இவ்வூர்ப் பெயர் கீரன் தந்தை என்ப தன் மரூவாக இருக்க வேண்டும். இவ்வொன்றியத்தில் மாரந்தை, பன்னந்தை என்ற ஊர்கள் இருப்பதும் ஒப்பு நோக்கத்தக்கது. தனிச்சியம் : இவ்வூர் அருகே வாலி நோக்கம் என்ற ஊர் உளது. அவ்வூரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் நெல்லை மாவட்ட எல்லை உள்ளது. வாலிநோக்கத்தி லிருந்து ஒரு கி. மீ. விலிருந்து தென்னந் தோப்புக்களும் தூய தண்ணீருள்ள நல்ல தண்ணீர்த் தீவு கடலுள் இருக் கிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/312
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை