கணிதநூற்பேராசிரியராக 318 இருந்தவர்; பேரரறிஞர்; தம் ஆட்சிக்காலத்தில் சிவகங்கைச்சீமையில் செயற்கரிய செயல்களைச் செய்தவர். அந்நாளிலேயே சிவகங்கையில் பிராமணர் அல்லாதார் இயக்கம் வேரூன்றிற்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தங்கும் அறையில், பிராமண வக்கீல் களுக்கு ஒரு பானையில் தண்ணீரும் ஏனைய வக்கீல்களுக்கு ஒரு பானையில் தண்ணீரும் வைக்கப்பட்டது. விளைவு இதன் பிராமணரல்லாத வழக்கறிஞர்கள் இம் மாவட்டத்தில் திராவிடக்கழகத்தையும் பிற்காலத்தில் தி.மு.க.வையும் வளர்த்ததாகும். . தம்புதுரைக்கு முன்னரும் பின்னரும் 150 ஆண்டு களில் சிவகங்கைச் சீமையின் ஆட்சி, செம்மையாக நடைபெறவில்லை. அதன் பயனாக இந்த ஜமீனை, சென்னை யிலுள்ள பி. ஆர். அண்டு சன்ஸ் என்ற வணிகக்குழு குத்தகைக்கு எடுத்து Lessee ஆக, ஆட்சி நடத்திவந்தது. அவர்கள் காலத்தில் சிவகங்கைக்குக் குடிநீர் கொண்டு வர 16மைல் நீளத்திற்கு 3 அடி அகலமுள்ள கால்வாயை வைகை ஆற்றிலிருந்து வெட்டினர். அதற்கு லெஸ்ஸீ கால்வாய் என்று பெயர். என்று பெயர். 1918-இல் 1918-இல் லெஸ்ஸி' ஆட்சி முடிவடைந்தது. கால்வாய் பிறகு தூர்ந்துவிட்டது. அதைப் புதுப்பித்துத்தான் 1958-இல் காங்கிரஸ் ஆட்சியில் இப்பகுதிக்கு வைகைநீர் வழங்கப்பெற்றது. . மருதிருவர் மரணத்திற்குப் பிறகு, சிவகங்கை அரச குடும்ப உரிமை யாருக்குச் சேரும் என்பது பெரிய குழப்பமாக உருவாயிற்று. 1830 முதல் 1929வரை லண்ட னிலுள்ள பிரிவிகவுன்சிலில் வழக்குகள் நடைபெற்றன' இதனால் சிவகங்கை அரசர் குடும்பத்தின் பணம் தீர்ந்தது. செட்டியார்கள் சிலர் அரசர்க்குக் கடன் வழங் கினர். அந்தக் கடன்களைக் கட்ட சிவகங்கை
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/320
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை