320 இங்கிருந்து மானாமதுரை 18.கி.மீ. திருப்பத்தூர் 35, மேலூர் 26, மதுரை 48, தொண்டி 35. ஊர்ப் பெயர்: வேங்கை மார்பன் முதல் வெள்ளையரை விரட்டியடித்த வீர பாண்டியன் வரை வீரத்திருமன்னர் பலர் வாள்மேலும் வேல் மீதும் விளையாடிய பாசறை யாக, பறந்தலையாக விளங்கியதால் செவ்வேங்கை என்பது சிவகங்கை ஆயிற்று என்று சிலரும் தில்லையிலுள்ள நடராசர் கோவில் சிவகங்கைக் குளம் போன்று இவ்வூரில் குளமும் அதன் உள்ளிடத்தே சிவ லிங்கமும் அமைந்துள்ள தால் சிவகங்கை என்று பெயர் ஏற்பட்டதென்று வேறு சிலரும் சிவன் முடியில் திகழும் கங்கையை நினைவுறுத்த வேண்டி விசுவநாதர் விசாலாட்சி சமேதராய் வீற்றிருக் கும் சிவன் கோவிலுடைய ஊர் ஆதலின் சிவகங்கை என்னும் பெயருடன் இவ்வூர் விளங்கி வருகிறது என்று இன்னும் சிலரும் கூறியுள்ளனர். சிறப்புக்கள்: கௌரிமஹால் என்னும் அரண்மனை யாலும் அரசாங்க அலுவலகங்களாலும் இந்நகர் புகழ் பெற்றிருக்கிறது. அரண்மனைக்குள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி கோவில் இருக்கிறது. இது பாபனாசம் சிவனால் பாடப் பெற்றது. அரண்மனை தான் இந்நகரின் மிகப் பழமை யான கட்டிடம். வீரபாண்டியக் கட்டப்பொம்மனுக்கு 1798-99 - இல் சின்ன மருது அடைக்கலம் கொடுத்தது இந்த அரண்மனையில் தான். சிவகங்கையில் காணத்தக்கவை: ஒரு புறம் மயில்கள் தோகை விரித்தாட, பிற பகுதிகள் இடிந்து கொண்டி ருக்கும் கௌரிமஹால் என்னும் பழைய அரண்மனை; அங்கே அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் மண்டபத்தி லுள்ள கருங்கல் சவுக்கை, அதன் நான்கு மூலைகளி
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/322
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை