321 லுள்ள யாளிவடிவம், தங்கக் கலசம் உள்ள மணிக் கூண்டு, அரச குடும்பத்தினர் நீந்திக்குளிக்க (வெளிக் குளத்துடன் தொடர்புடைய) ஒரு குட்டை. காசி சிவகங்கையில் இருப்பவை: தியசாபிகல் லாட்ஜ், கோகலே மண்டபம், பிராடஸ்டண்டு ஆலயம். விசாலாட்சி கோவில், மின்சார சப்ஸ்டேஷன், அரசர் பெயரால் கல்லூரியும் உயர்நிலைப்பள்ளியும், ஆங்கிலேய அம்மையார் பெயரால் பெண்கள் பள்ளி, 80 வழக்கறி ஞர்கள். பல நீதிமன்றங்கள், ஏராளமான அரசாங்க அலுவலகங்கள், இராமநாதபுர மாவட்ட நூலகத்தின் தலைமை நூல் நிலையம், கத்தோலிக்கர்களுக்கு உரிய Church of ourLady of Assumption. சிவகங்கையில் இல்லாதவை: பெரிய தொழிற்சாலை. வியாபாரம். சிவகங்கையின் ஏற்றுமதி: வெளிநாட்டுத் தொடர் புடைய சிக்கலான வழக்குகள் பற்றி முடிவு செய்யச் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு "அப்பீல்கள்." சிவகங்கை மக்களின் விருப்பம்: மானா மதுரையி லிருந்து தூத்துக்குடிக்கு ரயில் பாதை அமையவேண்டும் என்பது. சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் இவ்வொன்றியம் 43 சிற்றூர்களை மட்டும் உடையது. அலுவலகம் சிவகங்கையில் இருக்கிறது. ஒன்றியத்து ஊர்கள் சிவகங்கைக்கும், மேலூர் (மதுரை மாவட்டம்) வட்டத்துக்கும் இடையேயுள. அரசனூர்: கோமாரிப் பட்டிக்கும் மீனாட்சிபுரத்திற் கும் இடையே 5.கி.மீ. தொலைவுக்கு, காரியகப் படிவங் கள் உள்ள பாறைகள் இருக்கின்றன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/323
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை