வைகாசி 328 நிகழும். அங்கு வெள்ளித் தேரில் அம்மன் உலாவரும் நாளில் காளையார்கோவிலில் தெப்பத்திருவிழா நிகழும். பிரம்மோற்சவத்தை யொட்டிப் பெரிய மாட்டுத் தாவணி இங்கு கூடுகிறது. ஆடி மாதத்தில் பூரம் திருவிழா நடைபெறுகிறது. தை மாதத்தில் காளீசர்க்குப் பிரம்மோற்சவம் நிகழ்கிறது. அறங்கள் 32-ம் இத்தலத்தில் செய்யப்பட்டுள்ளன. ஆகமப் பாடசாலைகள். தேவாரப் பாடசாலைகள் பரத நாட்டியச் சாலைகள் சிறப்புடன் மிளிர்ந்த தலம் இது. இங்கு சுமை தாங்கிக் கற்கள் ஏராளம். கருவில் உருவான குழந்தையை முழுவடிவத்தில் உயிருடன் காண இயலாது கருச் சிதைந்த பெண்கள் தாங்கள் சுமந்தது பலன் தராமற் போயிற்றே என்ற எண்ணத் தில் இறைவனிடம் பிள்ளைப்பேறு வரம் பெற சுமை தாங்கிக் கல் அமைப்பது பண்டைத் தமிழர் வழக்கங் களில் ஒன்று. ஆவுறையும் கற்களும் இவ்வூரின் புறப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இரைதேடி மேயும் மாடுகள் அரிப்பு ஓற்பட்டால் உரசிக் கொள்ள, இக் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. உயிர்களிடத்து அன்பு காட்ட இவ்வழக்கம் நிலவியது. இந்நாளில் SPCA நிறுவி அதன் தலைவராக வந்து விழாக்களில் மாலை போட்டுக்கொண்டால் உயிர்களிடம் அன்பு காட்டுவ தாகப் பறை சாற்றப்படுகிறது. இவ்வூரின் சிறப்பு இங்கு வேலையாக வருபவர்களுக் குத் திருமணம் நிகழ்வதாகும். திருமணம் தடைப் பட்டால் அதுவரை அவர்கட்கு வேற்றூருக்கு மாறுதல் கிடைப்பதில்லையாம்!
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/330
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை