387 காளியம்மன் மிகவும் ஆற்றலுள்ள தெய்வம். ஒருவரால் ஏமாற்றப்பட்டவர். மனம் நொந்து பழைய காசு ஒன்றை இரண்டாக வெட்டி, வெட்டுடைய காளி யம்மனின் பின்புறம் போட்டால், பணத்தை எடுத்துக் கொண்டவரின் குடும்பத்தை அது பாதிக்கும் என்று அஞ்சுகிறார்கள். காளியம்மன் அவருக்குத் தண்டனை கொடுக்கும் என்பது நம்பிக்கை. இராமநாதபுரம், நெல்லை மாவட்ட மக்கள் இங்கு மிகுதியாக வருகிறார்கள். சூசையப்பர் பட்டினம்: காளையார் கோவிலிலிருந்து ஒரு கி.மீ.கிறித்தவர் மிகுதி. மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் இவ்வொன்றியத்தில் மானாமதுரை என்னும் நகரப் பஞ்சாயத்தும் 41 ஊராட்சிமன்றங்களும் அடங்கியுள. மானாமதுரை : வைகைக் கரையின் இருபக்கமும் அமைந்தது. நான்கு திக்குகளிலிருந்து வரும் இரயில் களின் சந்திப்பாகவும், இராமநாதபுரம் பகுதிக்கும் ராமேசுவரம் தீவுக்கும் செல்ல வாயிலாகவும் இருப்ப தால் கேந்திரமான இடமாக விளங்குகிறது. இங்கிருந்து மதுரை 48 கி.மீ. எல்லாத் திக்குகளிலும் பஸ்போக்கு வரத்து உள்ளது. இவ்வூரின் பெயர் மானவீர மதுரை என்பர். 14-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மானவீரன் என்ற பாண்டியனால் உண்டாக்கப் பெற்றதாகக் கூறுவர். இவனைப்பற்றிய கல்வெட்டுக்கள் காஞ்சிபுரத்தில் இருக் கின்றன. அநுமார் சீதையைக் கண்டுபிடித்து வந்ததற் காக அனுமார்க்கு இராமர் இவ்வூரில் சேனாதிபதி வேலை வழங்கியதால் வானரவீரர் மதுரை என்று பெயர் வந்ததாகவும் ஒருசிலர் கருதுகின்றனர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/339
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை