மானியங்களில் $39 பலர் தோன்றியுள்ளனர். அரசர்களிடம் பரிசுபெற்று வாழும் வழக்கம் இவர்களிடையே நிலவிவந்தது. நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் 'வேம்பத்தூரார்......' என்ற குடும்பங்களைக் காணலாம். இவ்வூர்ப் புலவர்களிடம் தங்கள் ஏட்டுப் பிரதியைக் காண்பித்த பிறகே அவற்றை வெளியிடும் வழககம் சில நூற்றாண்டுகளுக்குமுன் இருந்ததாக இவ்வூரார் கூறுவர். இராஜகம்பீரம் : கத்தோலிக்கர் மிகுந்தது. லூர்து மாதாகோவில் இங்கு கட்டப்பெற்றிருக்கிறது. அருகு. சவேரியார் பட்டினம் : மானாமதுரைக்கு இங்குள்ள புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தில், சேவியர் திருவுருவத்தின் சிகரமாக உள்ள முடியைத் திருட ஒரு ஹிந்து நுழைந்ததாகவும் திருடும்போது அவன் கண்பார்வை இழந்து அங்கேயே தங்கிவிட்டதாக வும் மறுநாட்காலையில் தேவாலயத்தைத் திறந்தபோது உள்ளே நுழைந்த கிறித்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, புனித பிரான சிஸ் சேவியர் அருளால் இழந்த கண்பார்வையைப் பெற்றான் என்றும் கூறப்படு கிறது. கீழப்பசளை: இங்குள்ள ஒரு மரம் உயிரியல் ஆய்வாளர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த மரத்துக்குப் பெயர் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஒரு முனிவரின் சமாதியின்மீது இம்மரம் முளைத்திருப்ப தாகக் கர்ண பரம்பரைக்கதை கூறுகிறார்கள். மரத்தின் உருவம் படுத்த முதலை போன்றது. இலைகள் உதிர்ந்து மீண்டும் தளிர்கின்றன. ஒரு கொத்தில் பலவேறுவகை இலைகள் உள்ளன. ஒரு கொத்திலேயே ஒரு காம்பில் மூன்று இலைகள், நான்கு இலைகள், என்றெல்லாம் பல எண்ணிக்கைகளைப் பார்க்கலாம்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/341
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை