பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 கத்தையே கட்டித் தழுவியதாகக் கூறுவர். து போன்ற செய்தி, தஞ்சை மாவட்டத்துச் செந்தலையி லும் வழங்கி வருகிறது. சிவபெருமானே சித்தராக இத்தலத்துக்கு வந்த தாகத் திருவிளையாடற் புராணம் கூறும். திருப்பூவணத்தில் உயிர் ந்த்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. வெளியூர் களில் இறப்பவர்களின் எலும்பைக் கரைக்க, உறவினர் இத்தலத்துக்கு வந்து, உரிய சடங்குகளை வைகைக் கரையில் ராலும் உடையது செய்கின்றனர். இத்தலம் மாணிக்கவாசக குறிப்பிடப் பெற்றிருக்கிறது. திருப்புகழும் இவ்வூரைப் பற்றிய சிறந்த இலக்கியம் திருப்பூவண நாதர் உலா என்பது. 18-ஆம் நூற்றாண்டினரான இவ் வூர்க் கந்தசாமிப் புலவரால் பாடப் பெற்று இவ்வுலா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரால் பதிப்பிக்கப் பெற்றிருக்கிறது. கருவூர்த் தேவர் இத்தலத்தைப் பாடி யுள்ளார். சோழ நாட்டுக்கு வெளியில் உள்ள தலங் களுள் இவர் பாடியது இவ்வூர் ஒன்றே. இப்பகுதியில் முதல் போகத்தில் நெல்லும். அடுத்த போகத்தில் கரும்பு அல்லது வாழையும் மாறி மாறிப் பயிர் செய்கின்றனர். இந்த நன்செய் நிலங்கள் தஞ்சை மாவட்டத்து நிலங்களை விடக் கூடுதலான மதிப்புடையவை. சந்தை நாள்: செவ்வாய்க்கிழமை. இருப்பவை: சுப்பிரமணியர் கோயில், பெருமாள் கோவில், கோரச்சித்தர் கோவில், கத்திரிக்காய்ச் சித்தர் கோவில், ரோமன் கத்தோலிக்கர் தேவாலயம், காசிகா ஞானாச்சாரிய சுவாமிகள் நிறுவிய வேதாந்த நந்த