பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345 திருப்பாச்சேத்தி: (3,705) வைகைக் கரையிலிருந்து 1.கி.மீ. தொலைவிலும் திருப்பூவணத்திற்கு 10.கி.மீ. தொலைவிலும் உள்ள ஊர். இரயில் நிலையம் உண்டு. சேரைமாநகர் என்ற பெயரும் இருந்து வருகிறது. இவ்வூர்ச் சிவன் கோவில், திருப்பூவண நாதர் கோவிலுடன் சேர்ந்தது. சிவகங்கை தேவஸ்தானத்தார் ஆட்சியில் இருக்கிறது. இது நௗமஹாராஜாவால் கட்டப் பெற்றதாக இவ்வூரார் கூறுவர். இவ்வூர்ச் சுந்தரவல்லி அம்மன் கோவிலுக்கு மருது சகோதரர்கள் மரகதப் பச்சையில் சிவலிங்கம் செய்து வழங்கினர். அது இன் றும் வைத்து வழிபடப் பெறுகிறது. இவ்வூர்த் திருநோக்கி அழகனார் கோவிலும் பழமையானது இவ்வூரின் ஏற்றுமதிகள் - நெல், வாழை, வெற்றிலை,கரும்பு, வெல்லம், சுவையான கத்திரிக்காய், அழகாகவும் நீளமாகவும் உள்ள அரிவாள். வெட்டும் குத்தும் மிகுதியாதலால், அரிவாள் உற் பத்தி திருப்பாச் சேத்தியில் பெரிதும் பரவியிருக்கிறது. மழவராயனேந்தல்: (1,000). வடக்கிலும் கிழக்கிலும் வைகை சூழ்ந்துள்ள வளமான பகுதி. கறுநிறமண் உடையது திருப்பாச் சேத்தியை ஒட்டிய சிற்றூர். மருதுபாண்டியர் இனத்துச் சேர்வைகாரர் மிகுதியாக வாழ்கின்றனர். மழு-ஓர் ஆயுதம். உழவர் பயன்படுத்துவது சிவபெருமானே தங்களது ஆயுதத்தை ஏந்த வைத்தவர் மழவர். மழவர் என்போர் பாண்டிய வீரர்கள். அவர் களுக்குப் பாண்டிய அரசரால் வழங்கப் பெற்ற ஊர் ஆதலின் மழவராய னேந்தல் என்ற பெயர் ஏற்பட்டது இ.-22