பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 17-ஆம் நூற்றாண்டினரான இயற் புலவர் மழவை மகாலிங்க ஐயரும், 20-ஆம் நூற்றாண்டினரான இசைப் புலவர் சுப்பராம பாகவதரும் இவ்வூரினர். 4.கி.மீ. தொலைவிலுள்ள வேம்பத்தூரிலும் பல தலை முறைகளாகப் புலவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். மழவைக் கனபாடிகளில் தமிழ்ப் புலவர்கள் உள்ளனர். மழவையில் மருது பாண்டியன் காப்பாற்றப் பெற்ற நிகழ்ச்சியை வெல்ஷ் என்ற ஆங்கிலேய தளபதி தம் நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். சிவகங்கை அரசர்கள் தமிழ்ப் புலவர்கட்கு இவ்வூரில் நில புலன்களை யும், (மானாமதுரையிலிருந்து 8.கி.மீ. தூரத்திலுள்ள) மிளகனூர் என மருவியிள்ள மேகநல்லூரில் சம்ஸ்கிருதப் புலவர்கட்கு நில புலன்களையும் வழங்கியுள்ளனர். புல் வாய்க்கரை: புல் வளர்ப்பதற்காக வாய்க்கரை உள்ள சிற்றூர். புலவச்சேரி: திருப்பாச்சேத்திக்கு தெற்கே 6.கி.மீ. தொலைவில் இவ்வூர் இருக்கிறது. இதன் வடக்கே தஞ்சாக்கூர் எனனும் சிற்றூர் ஒன்று உளது. அக் காலத்தே தஞ்சைவாணன் என்னும் கொடை வள்ளல் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருடைய பெரும் புகழைத் 'தஞ்சை வாணன் கோவை' என்னும் நூல் வாயாரப் பேசுகிறது. இந்தத் தஞ்சாக் கூருக்கு அடுத்தாற்போலப் புலவர்ச் சேரி என்னும் கிராமம் அமைந்துள்ளதால் இது பழங்காலத்தில் புலவர்கள் வாழ்ந்து வந்த புலவச் சேரி யாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது. இந்தக் கிராமம் முழுவதும் சேது காவலர்களின் ஒரு கிளையாகிய சிவகங்கை சமஸ்தான மன்னர்களால் ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்துக்கு ஸ்ரீ சந்திரமௌளீஸ்வர சுவாமி பூஜா பிராம்மண சந்தர்ப்பணத்துக்கு கொடுக்கப்பட் டிருக்கிறது.