பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வட்டத்தில் 648 பயிர்த் தொழிலே தலையாய தொழிலாக உள்ளது. குறிப்பாக நெல்,எள்,மிளகாய் வேளாண்மை பெரிய வருவாய் தருகிறது. நெடுங்கால மாக, வைகைக் கரையிலும் சில கண்மாய்களிலும் உள்வாய் நிலங்களை உழுவர்களின் பட்டாப் பிரச்சினை 1970-இல் முடிவு செய்யப்பட்டது. சரிகை வேட்டி நெசவு இங்கு ஒரு முக்கிய தொழில். இதில் சௌராஷ்டிரர் ஈடுபட்டிருக்கின்றனர். இளையாங் குடியில் முஸ்லிம்கள் பல்லாயிரவர் உள்ளனர்; முன் வெளிநாடுகளிலும் இப்போது உள்நாட்டிலும் தொழில் செய்கிறார்கள். இவ்வட்டத்தில் அடங்கியவை: (1) பரமக்குடி நகர் (2) பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் (3) இளையாங்குடி >> (4) போகளுர் 33 (5) நயினார் கோவில் பரமக்குடி: இந்நகர் இவ்வட்டத்தின் தலைநகர் வைகை ஆற்றின் கரையில் வளமாக அமைந்தது. இரயில் நிலையமும் பெற்றிருக்கிறது. இங்கு வியாழக்கிழமை கூடும் சந்தை பரமக்குடி, இராமநாதபுரம், முது குளத்தூர் வட்டங்களுக்கு மிக முக்கியமானது. இந்நகர் ஆயிர வைசியர், வெளியூர்களில் நகை வாணிகத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இந்நாளில் பிற தொழில்களிலும் முன்னேற்றம் அடைந்து வரு கின்றனர். கிறித்தவர்களும் பல்லாயிரம் பேர் இந்நகரில் உள்ளனர்.