853 எமனேசுவரம் வழியாக 12 கி.மீ. தொலைவிலும் இருக் கிறது. முற்காலத்தில் திருமருதூர் என்ற பெயர் வழங்கி வந்தது. வாய்பேசாத (ஊமை) ஒரு முஸ்லிம் பெண் இக்கோவிலில் வந்து வழிபட்டதாகவும், திடீரென இறை யருளால் ஊமைப்பெண் பேசியதாகவும் இதையறிந்து அப்பெண்ணின் பெற்றோர்கள் கோவிலுக்கு ஓடோடி வந்து, இறைவனிடம் நீரே என் நயினார் என்று பேரார்வத் துடன் கூறி வழிபட்டனர் என்றும் அன்றுமுதல் திருமருதூர் என்ற பெயர்மாறி நயினார் கோவில் என வழங்கிவருவதாகவும் கூறப்படுகிறது. அந்த ஊமைப் பெண் கர்நாடகத்தை ஆண்ட முல்லா சக்கரவர்த்தி யின் மகள் என்பர். நாமதேவர் என்ற வட இந்திய பக்தர் இங்கு வழி பட்டதாகவும் அவருக்காக இறைவன் மேற்குமுகமாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முகமதியரும் இக்கோவிலில் வழிபடுகிறார்கள். பள்ளி அறைக்குக் கீழே சுனை இருக்கிறது. கோவிலுக்குக் கீழே பெரியதொரு மண்டபம் இருக்கிறது. இராமநாதபுரத் துக்குச் சுரங்கப்பாதை இருந்ததாம். இக்கோவிலுக்கு இரண்டு தேர்கள் உள்ளன வைகாசியில் பத்து நாள் விழாவும் ஆடியில் பதினைந்து நாள் உற்சவமும் தை மாதத்தில் பூசமும் கொண்டாடப் படுகின்றன. தைப் பூசத்துக்கு இறைவன் வைகை யாற்றுக்கு எழுந்தருளுகிறார். வைகை இங்கிருந்து 5.கி.மீ. தொலைவில் செல்லுகிறது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இங்கு கூட்டம் மிகுதி. . இத்தலத்தைப் பற்றிய இலக்கியங்கள் - திருமரு தூர்ப் புராணம், கணபதிதாசர் பாடிய நெஞ்சறி விளக்கம், தலைமலை கண்ட மருதுத் தேவர் பாடிய மருதூர் அந்தாதி.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/355
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை