355 களுள் ஒன்று. அது இவ்வட்டத்தில் இருக்கிறது. அக் கண்மாய்ப் பகுதியிலும் எழுவன் கோட்டை அணைக் கட்டுப் பகுதியிலும் வேளாண்மை மிகவும் ஏற்றம் பெற் றிருக்கிறது. உப்பு எடுத்தல், மீன் பிடித்தல், UL கோட்டுதல் ஆகியவை கடலோரத்தில் நிகழ்கினறன. இவ்வட்டத்து மக்கள் பெரும்பாலோர் 1950 வரை வெளிநாடுகளை நம்பியே வாழ்ந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே, உள் நாட்டில் பயிர்த் தொழிலில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் வெளிநாடுகளிலிருந்து பணம் வரவழைத்து, புன்செய் நிலங்கள் வாங்கி அவற்றை நன்செய்யாக மாற்றி வருகின்றனர். போக்குவரத்து வசதி இவ்வட்டத்தில் குறைவு. இரயில் பாதை கிடையாது. சேதுரஸ்தா எழுபது ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை; அதனால் அது சீரழிந்தது, அதை அனுசரித்து இப்போது தேசிய நெடுஞ்சாலையாகக் கிழக்குக் கடலோரச் சாலை போடப் பட்டு வருகிறது. இருப்பவை இவ்வட்டத்தில் முக்கிய சாலைகளாக டி.டி. ரோடும் மதுரை - தொண்டிச்சாலையும். இவற்றில் ஏராளமான விரைவு வண்டிகளும் நெடுந்தொலைவுக்குச் செல்லும் பேருந்துகளும் செல்லுகின்றன.டி.டி.ரோடு என்பது தேவகோட்டை - தேவிபட்டினம் சாலை. இவ் தேவகோட்டையிலிருந்து இராமநாதபுரம் 46 மைல் (75.கி.மீ ); இச்சாலை வடக்கு இராமநாதபுர மாவட்டக் கழகத்தாரால் போடப் பெற்றது. வழியே இவ்வட்டத்தின் பிற பகுதிகளில் தங்கள் செலவில் சாலை அமைத்துக் கொள்ள முன்வரும் பஸ் கம்பெனிகள் பத்து ஆண்டுகளுக்கு அச்சாலைகளில் நடத்தும் தனி உரிமை பெறும் என அரசினர் அறிவிக்க வேண்டும்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/357
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை