பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 எடுத்துக்காட்டாக விளங்கும் முறையில் தேவ கோட்டை நகரச் சிவாலயம் நடத்தப்பட்டு வருகிறது. நகரைச் சுற்றி நான்கு சுயம்பு லிங்கங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. (¹) திருவாடானைச் சாலைக்குக் கிழக்கே வெளிமுத்தி. (2) இராம் நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள எழுவன் கோட்டையில் செந்நெல் வனம். (3) சேரர், சோழர், பாண்டியர் வழிபட்ட இரவி சேரி. (4) கோட்டூர். கோட்ட ஆட்சி அலுவலகமும் ஏராளமான நீதி மன்றங்களும் இருப்பதால் இந்நகரில் வழக்கறிஞர்கள் நூறுபேருக்குமேல் உள்ளனர். சேவு. அ. அண்ணாமலை செட்டியார் கல்லூரியும், பி.எஸ்.எஸ். சோமசுந்தரம் செட்டியார் கொடையால் அரசினர் தொடங்கியுள்ள மருத்துவ மனையும் 1971 இலிருந்து இயங்கி வருகின்றன, இந்நகரில் அரசியல் எழுச்சி மிகுதி. ஒரு சாலைக்கு தியாகிகள் ரோடு என்று பெயரிடப் பட்டிருக்கிறது. ங்கிருந்து மதுரை 60 மைல். பல நகரங்களுக்கு பஸ்வசதி உண்டு. திருவாடானை ஊராட்சி ஒன்றியம்: வட்டத் தலைநகரான திருவாடானையும், டாலமி, அப்துல் பிடா, இபன்பதூடா, மார்க்கோ போலோ ஆகியோரால் குறிப்பிடப்பட்ட மூன்று துறைமுகங்களும் இவ்வொன்றியத்தில் உள்ளன. இந்தத் துறைமுகங் களாவன: தொணடி பாசிப்பட்டினம் (PASA), வட்டாணம் (FATNI, FATTAN). இங்கு முஸ்லிம்கள் பல்லாயிரம்பேர் உள்ளனர். உப்புக் காய்ச்சுவதும் மீன் பிடிக்கும் வலைகள் செய்வதும் இங்குள்ள தொழில்கள்.