359 i தொண்டி: பெயர்க்காரணம்: தொண்டி என்பது, துளை, துவாரம். துளைபோட்ட காது உடையவனைத் தொண்டு காதன் என்று குறிப்பிடுவது உண்டு. தொண்டுகாதன் குடும்பம்' என்ற பெயர் இன்னும் செட்டி நாட்டில் சில குடும்பங்களுக்கு உண்டு. இவ்வாறே முகத்துவாரம் என்பது துறைமுகத்தைக் குறிக்கும். அப்பொருளிலேயே இவ்வூருக்குத் தொண்டி என்ற பெயர் ஏற்பட்டது போலும். 'தொண்டு' என்பது நிலத்துள் புகுந்த கடற் பகுதி என்றும் பொருள்படும். இப்பொருளிலேயே தொண்டி என்ற பெயர் ஏற்பட்டது என்பர். இங்குள்ள கடற்கரையை இவ்வூர் மக்கள் "அலை வாய்க்கரை' என்று அழகுத் தமிழால் கூறுவதாக திரு. அப்துற் - றஹீம் 'தொண்டி மாநகர்' எனனும் நூலில் எழுதியுள்ளார். - சங்ககாலத் துறைமுகம்: தொண்டி என்ற பெயரில் ஒரு துறைமுகம் பழந்தமிழ் நாட்டில் இருந்தது. அது எது என்பதைப் பற்றி கருத்து வேறுபாடு நிகழ்கிறது. சேரர் தலைநகராயிருந்து கடல் தொண்டி எனப் புகழ் பெற்ற துறைமுகம் இன்று Quilandy என மருவி, கேரள நாட்டில் ஒரு சிற்றூராக இருக்கிறது. சேரர் துறைமுகமாயிருந்த தொண்டி. ஆலப்புழை யருகேயுள்ள தொண்டிப்பாயில் என்பர் சிலர். சோழர் துறைமுகம் இராமநாதபுர மாவட்டத்துத் தொண்டியே. சிலப்பதிகாரத்தில், 'ஓங்கிடும் பரப்பின வங்க வீட்டத்துத் தொண்டியோர்' என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. இத் தொண்டியும் சங்க காலத்தில் இருந்ததாகச் சிலரும, மேற்குக் கரைத் தொண்டியின் நினைவாகப் பிற் காலத்தில் அமைந்த துறை எனப் பிறரும் கூறுவர். இத் .
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/361
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை