360 தொண்டி, சோழரிடமும் பாண்டியரிடமும் இருந்ததாக வும் செய்திகள் உள்ளன. விளைந்த இலக்கியத்தில் தொண்டி: தொண்டியில் நெல் குறுந்தொகையில் கூறப் பெற்றிருக்கிறது. இந் நாளிலும் தொண்டி நெல் சுவைமிக்கது. இத்துறை முகத்துக்கு வந்த அரபுநாட்டார். அரிசியையும் நுங்கை யும் கண்டு வியந்து "இஃது என்ன அரிசி? இஃது என்ன பானம்?" என்று கேட்டு மகிழ்ந்தார்களாம். அரபு நாட்டுத் தொடர்பு: இத்துறைமுகத்துக்கும் அரபு நாடுகளுக்கும் பல நூற்றாண்டுகளாக வியாபாரம் இருந்திருக்கிறது. அரபு நாட்டுக் குதிரைகள் மாணிக்க வாசகருக்கு இத்துறைமுகத்தில்தான் இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது அரபு நாட்டி லிருந்து வந்த அஞ்சு வண்ணத்தார் என்ற முஸ்லிம்கள் தொணடிக்கு அருகே அஞ்சுமன் என்ற ஊரை ஏற்படுத் திக் கொள்ளப் பாண்டிய அரசர்கள் இசைந்ததாக வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் கூறி யுள்ளார். சென்ற நூற்றாண்டுவரை யானைகளும் முத்துக் களும் அரபு நாடுகளுக்கு இத்துறைமுகத்திலிருந்து ஏற்று மதி செய்யப் பெற்றிருக்கின்றன. முஸ்லிம்கள் வாழ் நகர் தொண்டி. அவர்களில் பலர் அரபு நாட்டுத் தொடர்புடையவர்; எகிப்து. மொராக்கோ, மக்கா வாணிகத்துக்குத் தொண்டிக்கு வந்தவர்களின் வழித் தோன்றல்கள் சிலர்; அவருள் பல பிரிவுகள் உண்டு. மரக்காயர் தெரு, சோனகர் தெரு என்பன கடல் தொடர்பைக் குறிப்பன. கிழக்குத் தெரு வில் லெப்பைமார்கள் உள்ளனர். அரபு மொழியில் .
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/362
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை