364 பெயரை ஊழியம் பிள்ளை என்று மாற்றிக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள். சிவன்கோவில்: சுந்தரபாண்டியன் 8-ஆம் நூற்றாண் டில் சிவகாமி சமேத அம்பலவாணர் கோவிலைக் கட்டினான். இதைப் புதுப்பிக்கவும் அன்றாட வழிபாடுகள் நடத்தவும் இராமநாதசேதுபதி 1970-இல் முன்வந் துள்ளார். தொண்டியும் தமிழும்: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்ப்புலவரான பிச்சை இப்ராஹிம் புலவரின் ஆசிரியர் இவ்வூர் மோனகுரு செய்கு மஸ்தான் இவர் அடக்கம் செய்யப்பெற்ற இடத்தில் தேவ கோட்டை சுவாமிநாதன் செட்டியார் தர்கா கட்டி யிருப்பது புலவரின் பெருமையையும் இப்பகுதியில் நிலவும் சமரச மனப்பான்மையையும் வெளிப்படுத்தும். தொண்டிக் கடற்கரைப் பகுதிகளில் படையாச்சி களும் மீன்பிடித்து வாழ்கிறார்கள். இச்சமூகத்தினரான தொண்டி முத்துப் புலவருக்கு இவ்வூரின் "மீன் மகமை' நல்கிவந்தனர். ஒருமுறை புலவரை மீன்பிடிக்கும் படகில் அழைத்துச் சென்றனர். விளையாட்டாக அவரிடம் சிலர் "நீங்கள் பெரும்புலவராய் இருப்பது உண்மையாயின் மீன் தானாகவே வந்து வலையில் விழுமாறு பாடுங்கள்" என்று சொன்னார்களாம். ற வெங்கணமாய் ஓடுகின்ற கெள்ளலே இந்த வலையிலே வந்துபடு துள்ளியே என்று பாடிப் புலவர் பாடிய வாய் மூடுமுன் கெள்ளல் மீன் துள்ளிக்குதித்து வலையில் வந்துவீழ்ந்ததாம். பழமொழியில் தொண்டி: தொண்டியில் அரபுக் குதிரைகள் வந்து இறங்கின. இதையொட்டிச் சோழ
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/366
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை