பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

865 நாட்டில் ஒரு பழமொழி வழங்குகிறது. திமிராக நடந்து செல்லும் பெண்ணை "என்ன தொண்டிக் குதிரை மாதிரி நடக்கிறாய்?" என்று கேட்பார்கள். மேலும் அவள் திமிராகப் பதில் சொல்லுவாள் "பிறகு என்ன நொண்டிக்குதிரை மாதிரியா நடக்க?" தொண்டியில் இருப்பவை: 150ஆண்டுகளாக முட்டின்றி நடந்துவரும் அரு.லெ.சத்திரம், உந்திபூத்த பெருமாள் கோவில்; சிதம்பரேசுவரர் சிவாலயம்; இராணிவேலு நாச்சியார் மானியம் வழங்கியுள்ள தொண்டியம்மன் கோவில், ஏராளமான சத்திரங்கள். தொண்டியின் சிறப்புக்கள்: வாழ்வதற்கேற்ற சுகாதார நிலை, 1888இலேயே ஊராட்சிமன்றம் ஏற்பட்டது. தொண்டியின் மக்கள் தொகை: 11,000 முஸ்லிம்கள் உள்பட 14,000. தொண்டியிலிருந்து கடலோரமாக இராநாதபுரம் 45கி.மீ. புளியால் வழியாக தேவகோட்டை 33 கி.மீ. திருவாடானை: வட்டத்தலைநகர், தொண்டி இங் கிருந்து 11 கி. மீ. இவ்வூர் வழியாகத்தான் தொண்டிக் குச் செல்லவேண்டும். இராமநாதபுரம் இங்கிருந்து 53 கி.மீ. சம்பந்தர் பாடல் பெற்ற ஆடானைநாதர்- அன்பாயியம்மை கோவிலால் இவ்வூர் புகழ்பெற்றிருக் கிறது. நீலரத்தினத்தால் சிவலிங்கம் செய்து சூரியன் வழிபட்ட தலம். வருணனுடைய மகன் வாருணி துருவாசருக்கு மரியாதை செய்யாமையால் அவரால் ஆட்டுத்தலையும் யானையின் உடலும் அடைந்து அந்தச் சாபம் இந்தத் தலத்தில் நீங்கப்பெற்றதாகப் புராணம் கூறும். தேவகோட்டை நகரத்தார்களால் திருப்பணி செய்யப்பெற்று, கோவிலும் அதன் நீடுயர்ந்த கோபுர