35 தந்திருக்கின்றனர். வழி நெடுக அன்ன சத்திரங்கள் கட்டித் தந்திருக்கின்றனர். அந்த அறச்சாலைகள் செம்மையாக நடைபெற பல சிற்றூர்களை மானியமாக வழங்கினர். இயல் புலவர்களையும், இசைப் புலவர்களை யும், கலைஞர்களையும் நூற்றுக்கணக்கில் ஆதரித்துள் ளனர். பாண்டிய அரசர்கள் காலந் தொட்டே இவர்கள் அவ்வப்போது மதுரையை ஆண்ட மன்னர்களுக்கு பெரும் படையை அனுப்பும் ஆற்றல் பெற்றிருந்தனர். இந்நாளில் இந்திய அரசுக்கு தேவைப்பட்டால் உடனே பல்லாயிரம் சீக்கிய வீரர்களைத் திரட்டி பஞ்சாப் அரசு அனுப்பி வருவது போல் ஈராயிரம் ஆண்டுகளாக மறவர் தலைவர்கள் மதுரை மன்னர்கள் செய்தி யனுப்பியதும் வேண்டிய போர் வீரர்களை அவர்கள் குறிப்பிடும் இடங் களுக்கு அனுப்பினர். மறவர் தலைவர்களால் இவ்வாறு அனுப்பப்பட்ட போர் வீசர்கள் தங்கும் இடங்கள் யாவும் இராமநாதபுரம் என்று பெயர் பெறும். இவ்வாறு பெற்ற இராமநா தபுரங்கள் தமிழ் நாட்டில் ஏராளமாக உள்ளன. மலாயா நாட்டிலும் இராமநாதபுரம் உள்ளது. முன்னாளில் இராமநாதபுரம் என்னும் சொல் கன்டோன் மென்ட்' என்னும் பொருளில் வழங்கி வந்தது. இராம நாதபுரம் என்னும் பெயரில் வழங்கி வரும் ஊர்களைப் பற்றி நூலின் பிறிதொரு பகுதியில் குறிப்பிடுவோம். தளவாய் சேதுபதி நாயக்க மன்னர்களால் நியமிக்கப் பெற்ற சடைக் கத்தேவர் என்ற முதல் சேதுபதி, திருவாடானைக் கோவி லுக்கு ஏராளமான சொத்துக்களை வழங்கினார். தளவாய் சேதுபதியின் ஆட்சிக் காலத்தில் அவரு டைய குடும்பத்தாருக்குள் பூசல் மூண்டது. தளவாய்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/37
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை