பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 1780-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மருதுபாண்டியரை விரட்டியபோது, அவர் குதிரைமீதேறிவந்து இந்த மாதாகோவிலில் அடைக்கலம் புகுந்தார்; பாதிரியார் தாம் உட்கார்ந்திருந்த பெட்டிக்குள் அவர் புகுந்து கொள்ள இசைந்தார். ஆங்கிலேயவீரர் இங்கு வந்து மருதுவைக்காண இயலாதவராய் வேறு திசைகளில் அவரைத் தேடி ஓடினர். தம்மைக் காப்பாற்றிய பாதிரியாருக்கு மருதரசர் நன்றிகூறுமுகத்தான் சருகணி கிராமத்தையே மாதாகோவிலுக்கு சர்வமானியமாக வழங்கினார்; மாதாகோவிலுக்கு ஒரு தேரும் செய்து கொடுத்தாராம்; தேரை இழுக்க பனக்கரை என்ற ஊரை மானியமாக வழங்கினாராம். இன்றும் மருதரசர் வழியினரான உறுதிக்கோட்டை ஜமீன்தார் வந்து மரியாதை பெற்றபின்னரே சருகணித்தேர் நகருகிறது. உறுதிக்கோட்டை: சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் வழியினர் இவ்வூர் குறுநில மன்னர் ஆவர். இவர்களுடைய அரண்மனை சென்ற தலைமுறைவரை இங்கு சிறப்பாக இருந்தது. திராணி: இவ்வூராட்சியைச் சேர்ந்த சண்முகநாத பட்டணத்துக்கும் ஒத்தை வீட்டுக்கும் நடுவேயுள்ள கண்மாய்க் கரையில் உள்ள அணிக்குஞ்சு விநாயகர் கோவில் புகழ்பெற்றது. புளியால்: இது தேவகோட்டை; திருவாடானைச் சாலையில் இருக்கிறது. ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தால் சிறப்புப் பெற்றது. திருவேகம்பத்து: சிவகங்கை ஜமீனில் தாலுகாவாக இருந்தது. சிற்றாற்றைக் இது ஒரு கடந்து