பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. திருப்பத்தூர் வட்டம் இம்மாவட்டத்தின் பழமையான முக்கியமான வட்டங்களுள் இது ஒன்று. இது சிவகங்கைச் சீமையின் ஒரு பகுதியாக இருந்தது. சங்க கால முதற்கொண்டே இங்கு தமிழும் கலைகளும் வளர்ந்திருக்கின்றன. திருப்பத்தூர், பிரான்மலை (கொடுங்குன்றம்), திருக் கோட்டியூர் ஆகிய பாடல் பெற்ற தலங்களும், பிள்ளை யார் பட்டி, இளையாத்தக்குடி, குன்றக்குடி, அரியக்குடி முதலிய பிற தலங்களும் இவ்வட்டத்தில் உள்ளன. . பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற வீர மரபின ரான மறவர்கள் இங்கு பெரும்பான்மையினர். வெளி நாடுகளில் பொருளீட்டி அந்தச் செல்வத்தை இவ் வட்டத்தில் வீடுகள் கட்டியும் சாலைகள் போட்டும், கோவில்களை ஏற்படுத்தியும் எண்ணற்ற கல்வி மருத்துவ நிலையங்களைத் தோற்றுவித்தும், சிறுபான்மையினரான நகரத்தார் இவ்வட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருக் கிறார்கள். அவர்களுடன் சேர்த்து இவ்வட்டத்தில் பிற இனத்தவரும் வெளிநாடுகளைப் பார்த்திருக்கிறார்கள்; அங்கு சில காலம் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே, இவ் வட்டத்தினரின் கண்ணோட்டம் ஒப்புமைக் கண்ணோட்ட மாகத் திகழ்கிறது. இவ்வட்டத்தின் பழங்குடியினர் முக்குலத்தோரே. சில ஊர்களில் யாதவர் செல்வாக்குடன் உள்ளனர். வட்டத்தின் வழியே இரயில்பாதை செல்லுகிறது. காரைக்குடியில் கல்விப் பயிர் வளர்கிறது. செட்டி நாட்டில் நூல் ஆலையும், காரைக்குடியைச் சுற்றிலும்