382 1891-இல் இவ்வூரின் மக்கள் தொகை 6,579. 1901-இல் 11,801. 1930 வரை காரைக்குடி சிற்றூ ராகவே இருந்தது. திருப்பத்தூரும் தேவ்கோட்டை யும் காரைக்குடியை விடப் பெரிய அளவில் இருந்தன. அதனால் திருப்பத்வூரில் வட்ட ஆட்சி அலுவலகமும் தேவகோட்டையில் கோட்ட ஆட்சி அலுவலகமும் ஏற் பட்டன. சிறு பொருள்கள் வாங்குவதற்குக்கூட காரைக்குடி மக்கள் திருப்பத்தூருக்குச் செல்ல வேண்டி யவர்களாய் இருந்தனர். காரைக்குடி இராமநாதபுரம் ஜில்லா என்று எழுதினால்தான் கடிதங்கள் வந்து சேரும் நிலையும் இருந்தது. இப்போது அஞ்சல் எண் உள்ள நகராக விரிவடைந்திருக்கிறது. காரைக்குடியின் வளர்ச்சியில் முக்கியமான மாறு தல் 1930-ஆம் ஆண்டு அளவில் இரயில் பாதை போடப்பட்டதால், ஆரம்பமாயிற்று. 1947-க்குப் பிறகு கல்வித் துறையில் இந்நகரம் தமிழ் நாட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அரசியல் துறையில் காரைக்குடி எப்போதுமே விழிப்பான நகராக இருந்திருக்கிறது. 1942 போராட் டத்தில் ஆங்கிலேய அரசியலார் 50,000 ரூபாய் இந்நகருக்கு தண்டவரி விதித்தனர். பங்கு வியாபாரத் துறையில் காரைக்குடி முன்னணியில் இருக்கிறது. ஏராளமான வங்கிகள் இந்நகரில் உள்ளன். இந்திய அரசினருக்கு வருமானவரி வசூலாகும் இடங் களில் காரைக்குடிக்கு முக்கியத்துவம் உண்டு. மார்க்கெட்டும் இங்கு சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. தங்கம், வெள்ளி, வைரம் வெள்ளி, வைரம் வியாபாரங்களில் ஈடுபடும் சேட்டுகள் ஏராளமாக உள்ளனர். வெளி நாடுகளில் விற்பனையாகும் பொருள்களையும் கலை அழகுடனும்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/384
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை