பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

884 சிவகங்கை செம்மல் கண்ட ஆலயம், முகம்மதிய படை எடுப்பின்போது சின்னா பின்னம் ஆகிவிட்டது. பொந்தில் மறைத்து ஆயினும் கொப்புடையாள் திருவுருவை ஒரு மரப் வைத்துச் சென்றார் மன்னர். ஆண்டுகள் பலவாயின. பின்னர் ஆங்கில அரசு ஆளுங் காலத்தில் அம்பலகாரப் பெருமக்கள் குலத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி கொப்புடையாள் திருவுருவைக் கண்டெடுத்தார். சிவகங்கை மன்னன் கண்ட திருக்கோவில் மீண்டும் கட்டப் பெற்று ஒரு காட்டம்மன் கோவில் உருவாயிற்று. அதில் கொப்புடையாளின் மூல உரு கல்லில் வடிக் கப்பெற்றது. மன்னன் உருவாக்கிய செம்பினால் ஆன மூர்த்தியே இன்று கொப்புடையாளாகக் காட்சி தரு கிறாள். வைகாசி மாதம் முதல் செவ்வாய் அன்று தேர்விழா நடைபெறுகிறது. நடைபெறுகிறது. புத்தாண்டு நாளன்று வணிகர்கள் குதிரை வாகனத்தில் அம்மனை உலாவரச் செய்கிறார்கள். நவராத்திரிக் கொலுவும் சிறப்பாக நடை பெறுகிறது. இந்நகரில் சிறந்ததொரு சிவன் கோவிலும், பெரு மாள் கோவிலும், கிருஷ்ணன் கோவிலும் உள்ளன. எல்லாக் கோவில்களின் இறைவர்களும் கொப்புடை யம்மனும் காந்தி சதுக்கத்தில் மகார்நோன்பு அன்று அம்பு போடுவது கண்கொள்ளாக் காட்சியா யிருக்கும். கிறித்தவ சமயமும் சிறு அளவு பரவியிருக்கிறது. தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த தேவாலயம் செக்காலை அருகே இருக்கிறது. கத்தோலிக்கர்களும் ஓரு சிறு தேவாலயம் அமைத்திருக்கின்றனர்.