பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 கும் திருக்களம்பூருக்கும் இடையிலும், சுண்டக்காடு வேலங்குடிப் பகுதியிலும் ஓரளவு காடுகள் உள்ளன. பஸ் புகழ் பெற்ற பல கோவில்கள் உள்ளன. ஒரு கல்லூரியும், பல மருத்துவ மனைகளும், சிறந்த போக்கு வரத்து வசதியும் இந்த ஒன்றியத்தில் உண்டு. வேளாண்மையே தலையாய தொழில். தொழிற் சாலை கள் அமைக்கும் சிந்தனை இப்போதுதான் ஏற்பட்டிருக் கிறது. ஒன்றியத்தின் பரப்பளவு 105.5. சதுரமைல். மக்கள் தொகை 75.000.39 சிற்றூர்களும் திருப்பத்தூரி லும் நெற்குப்பையிலும் பேரூராட்சியும் உள்ளன. . திருப்பத்தூர்: திருப்பத்தூர், வட்டத் தலைநகராக வும், திருப்பத்தூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலை நகராகவும் உள்ளது. மக்கள் தொகை 17,000. மதுரையி லிருந்து 63 கி.மீ. தொலைவிலும் காரைக்குடி இரயில் சந்திப்பிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் அமைந்தது. வட ஆர்க்காடு மாவட்டத்தில் ஒரு திருப்பத்தூர் இருக்கிறது. அது நகராண்மைக் கழகம் உடையது. எனவே மாவட்டம் கூறாது திருப்பத்தூர் என்று பேசு வதும் எழுதுவதும் அந்நகரையே சுட்டும். இவ்வூரைக் குறிக்க, இராமநாதபுர மாவட்டத்துத் திருப்பத்தூர் என்ற பொருளில் திருப்பத்தூர் (Ramnad) என்று எழுதுவது மிக மிக இன்றியமையாதது. வட ஆர்க்காடு மாவட்டத்துத் திருப்பத்தூர் பாடல் பெற்ற பதி அன்று. பாண்டிப் பதினான்கு பதிகளைச் சொல்லவந்த பாடல் ஒன்றில் தென் திருப்புத்தூர்' என்று கூறப் பெற்றிருக்கிறது. திருப்புத்தூர் என்பதே சரியான பெயர் என்பர் அறிஞர். தஞ்சைமாவட்டத்தில் மன்னார் $