பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B7 திருமலை நாயக்கருக்கு எதிராகத் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையக்காரர்கள் கிளர்ச்சி செய் தனர். திருமலைச் சேதுபதியின் உதவியைத் திருமலை நாயக்கர் மீண்டும் நாடினார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திற்குச் சென்று பாளையக்காரர்களின் கிளர்ச்சியை அடக்கினார். இராமநாதபுரத்தின் புகழ் ஓங்கி வளர்ந்தது. 'திருவணை காவலன்', 'சேது மூலரக்ஷா துரந்தரன்' 'ராமநா தஸ்வாமி கார்யதுரந்தரன்' 'வைகை வளநாடான்' 'பரதநாடக பிரவீணன்' 'தொண்டியன் துரைக்காவலன்,' 'தேவை நகரதியன்' (தேவை - இரா மேசுவரம்) என்ற பட்டங்களும் திருமலைச் சேதுபதிக்கு இருந்ததாகக் கல்வெட்டு வாயிலாகத் தெரிகிறது. . கிழவன் சேதுபதி - இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதிகளில் கிழவன் சேதுபதி குறிப்பிடப்பட்டவர். இவர் 1674 முதல் 1710 வரை ஆண்டார். நாயக்க மன்னர்களிடத்தில் கட்டுண்டு கிடந்த மறவர் சீமையை மாற்றாரிடமிருந்து மீட்டு மாநிலம் மெச்சச் செங்கோலோச்சினார் கிழவன் சேதுபதி. மதுரைமீது படையெடுத்து வந்த ருஸ்தம்கான் என்ற முகம்மதியனை முறியடித்து மதுரையைக் காப் பாற்றினார். இப்பெரு மன்னர். அதனால் இவருக்குப் பரராஜகேசரி' என்ற சிறப்புப் பெயர் கிட்டியது. பாண்டிய ஆர்க்காட்டு நவாபின் படைத்தலைவரான அந்த ருஸ்தம் கான் மதுரை நாயக்க மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தார். அடிக்கடி நாட்டின்மீது படையெடுத்து மக்களைத் துன்புறுத்தி வந்தார். மதுரை மன்னர், கிழவன் சேதுபதியின் உதவியை நாடினார். கிழவன் சேதுபதி, தம் படையுடன்