பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 தன்னகத்துக் கொண்டது. செட்டி நாட்டின் பெரிய ஊர்களில் ஒன்று. பாடுவார் முத்தப்பசெட்டியார் என்ற பெரும் புலவர் பிறந்த ஊர். இவ்வூர் மீனாட்சி சுந்தரர் கோவில் பலவகைச் சிறப்புக்களை உடையது. சிவம் பெருக்குவதாலேயே இவ்வூருக்குச் சிவற்பட்டி என்னும் உண்டாயிற்று. திருமதுரை கீழச்சிவற்பட்டி பெயர் என்றும் கூறுவது உண்டு. இவ்வூரைப்பற்றி ஒன்பது பிரபந்தங்கள் எழுதப்பட்டுள்ளன. கீரணிப்பட்டி: குருவிக் கொண்டான் பட்டியை அடுத்த சிற்றூர். சித்திரை மாதத்தில் சீராக நடக்கும் திருவிழாவால் புகழ் பெற்றது. மகிபாலன்பட்டி: பூங்குன்ற நாட்டின் தலைநகர்.மணி முத்தாறு சூழ்ந்திருப்பதால் நீர் வளம் மிக்கது. பண்டித மணி கதிரேசச் செட்டியாரால் புகழும் மலாய் நாட் டில் பொருளீட்டியவர்களால் செல்வமும் பெற்றது. இளையாற்றக்குடி : வடக்கு இளையாற்றக்குடி, தெற்கு இளையாற்றக்குடி என்ற இரு ஊராட்சி மன்றங்கள் கொண்டது. முன்னாள் ஜமீன். தமிழ் நாட்டின் புகழ்பெற்ற கோவில் உடையது. நகரத்தார்க்குரிய ஒன்பது பிரிவுகளில் முதன்மை யானதும் மக்கள் தொகையில் கூடுதலானதும் ஆகிய இளையாற்றக்குடியாருடைய குலதெய்வம் கோவில் கொண்டுள்ள தலம். திருவெண்காடராகிய பட்டினத் தடிகள் இப்பிரிவினர். அவர் பெயரால் இளையாற்றக்குடி வழியினரில் ஓர் உட் பிரிவு உண்டு. செல்வச் செழிப்பில் நகரத்தார்கள் திளைத்தபோது இங்கே கற்கோவில் பலவற்றை அழகுற அமைத்தும் குளம் பல வெட்டியும் பிற நிலையங்களை நிறுவியும் கோடிக் கணக்கில் செலவிட்டுள்ளனர். காவிரிப்பூம்