பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

893 ஈட்டினத்திலிருந்து நகரத்தார்கள் வெளியேறியபோது பாண்டிய மன்னர் அவர்களுக்கு வழங்கிய முதல் ஊர் இளையாற்றக்குடி என்பர். அதனால் நகரத்தார் அனை வருக்குமே இளையாற்றக்குடியார் என்ற பொதுப்பெயர் வழங்கி வருகிறது. இத்தலத்து இறைவன் கைலாசநாதர், இறைவி நித்தியகல்யாணி. சிறப்பான திருவிழா முத்துமாரி யம்மன் தேர்த்திருவிழா. இக்கோவிலில் காமாட்சி அம்மன் இறைவனைக் தழுவும் காட்சியைக் கல்விக்கிரகத்தில் கட்டித் காணலாம். ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தசாவதாரம் பத்துத் தூண்களில் செதுக்கப்பெற்றிருக்கிறது. இளையாற்றக்குடிப் பிரிவைச் சேர்ந்த காரைக்குடி அ.மு.க. குடும்பத்தார் தஞ்சை மாவட்டம் பாபனாசம் வட்டம் மட்டையந்திடலில் கைலாசநாதர் நித்திய கல்யாணிகோவில் கட்டியுள்ளனர். இளையாற்றக்குடியில் காஞ்சிகாமகோடி மடத்தைச் சேர்ந்த அதிஷ்டானம் ஒன்று இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டில், 39 ஆண்டுகள் பீடத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீ மஹாதேவேந்திர சரசுவதி சுவாமிகள் இங்கு சமாதி அடைந்தார்கள். நகரத்தார்கள் கருங்கல்லில் சிவாலயம் கட்டியிருக்கின்றனர். இந்த அதிஷ்டானம் இளையாற்றக் குடிநகர்க் கோவிலுடன் இணைக்கப் பெற்றிருக்கிறது இப்போது காஞ்சிகாமகோடி பீடத்தில் பட்டத்தி லிருக்கும் பெரியவர்கள் இளையாற்றக்குடி தலத்தில் ஈடுபாடு உடையவர்கள். 1961-62-ஆம் ஆண்டுகளில் இங்கு தங்கினார்கள். அப்போது ஆஸ்திகர்கள் அனைவரும் 25