பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

894 வியக்கும் வண்ணம் வியாஸ வித்வத்ஸதஸ் என்ற பல்கலை மாநாட்டை வெகு சிறப்பாக நடத்தி அருள் பாலித் தார்கள். சிறுகூடல்பட்டி ; சிறுகுடல்பட்டி என்னும் ஊர் வாலிகண்டபுரம் அருகே உள்ளது. இவ்வூர் சிறுகூடல் பட்டி. இது கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊர் இங்குள்ள தங்கமலை அரசி என்ற அம்மன் கோவிலைப் பற்றி, கவிஞர் பின்வருமாறு பாடியிருக்கிறார். ஆடும் மேகம்நதி ஆல்வளரும் காடுகளை ஆசையுடன் நோக்குகின் றேன் ஆயதமி ழோசைவரப் பாடுவதில் ஆசைவர ஆனவரை பாடுகின் றேன் கோடுகளில் ஏறியதில் குலவுபனிச் சாரலுடன் கொஞ்சுவிளை யாடுகின் றேன் கூவுகுயில் கிள்ளைமயில் குக்குவெனும் வெண்புறவின் கூட்டத்தில் ஓடுகின் றேன் கேடுசெயும் மானிடரைப் போல அவை யில்லாமல் கேண்மைகொள வைத்த மயிலே! கெண்டைகரை யேறிவரும் சிறுகூடற் பட்டிவளர் தங்கமலை யரசிஉமை யே! பத்துவய தானவொரு பாலகன் உன் சந்நிதியில் பாடியதும் நினைவிலிலை யோ! பாதியிர வானதெனத் தாய்மனது வாடுகையில் பக்திசெய வந்ததிலை யோ? முத்துஎன இட்டபெயர் முத்தாக வேண்டுமென முறையீடு செய்யவிலை யோ? முற்றாகக் கேட்டபினம் நற்றாய் நீ தந்ததமிழ் முறையாக வந்ததிலை யோ?