395 சக்தி என வந்தவள்வி சாலாட்சி தேவியோரு சாத்தப்பன் பெற்றமகனை தமிழ்பாட வைத்ததொரு சிறுகூடற் பட்டிவளர் தங்கமலை யரசிஉமை யே! திருக்கோளக்குடி : செவ்வூர்க்கும் மிதிலைப்பட்டிக்கும் இடையேயுள்ளது இவ்வூர். மூவுலகையும் பிரதிபலிக்கும் மலைக்கோயில் இங்கு இருக்கிறது. மலைமீது குடைவரை விநாயகர் என்று எழுதப் பெற்ற ஒரு கோவிலும் அதனருகே தான்தோன்றி ஈசுவரர்கோவிலும் அதன் பின்புறத்தில் மலைச்சரிவில் குகை போன்ற அறையில் குடையப் பெற்ற விநாயகரும் உள்ளன. இதன்மீது படிகளேறிச் சென்று மேல் நிலையிலுள்ள கோளஈசுவரர் திருவுருவம், மகாமண்டபம், வாகனங்கள் ஆகியவற் றைக் காணலாம். ஆனிமாதக் கேட்டை நாளில் இவ் விறைவர்க்குத் திருவிழா நிகழும். . இதைவிட உயரமான நிலையில் ஒரு சுப்பிரமணியர் கோயில் உண்டு. இதை அடைய கோளஈசுவரர் கோயிலி லிருந்து இறங்கிச் சென்று அம்மன்கோயிலை வலம்வந்து கதவைக் திறக்கச் செய்து பாறை மீதேறிச் செல்ல வேண்டும். இங்கு ஆறுமுகப்பெருமான் மயில்வாகனத் தில், நின்றநிலையில் காணப்படுகிறார். இக்கோயில் முன்பு சமணர் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் மயிலை சீனிவேங்கட சாமி கருதுகிறார். பார்சவநாத சுவாமி என்ற சமணத் திருமேனி, வீற்றிருக்கும் கோலத்தில் இக்கோயிலில் உளது. வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. இக்கோயில் பிரான்மலை வகையறா ஐந்துகோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்தது; குன்றக்குடி திருவண்ணா மலை ஆதீனத்துக்குட்பட்டது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/397
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை