பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

896 14-ஆம் நூற்றாண்டில் மதுரையில் முஸ்லிம் ஆட்சி நடைபெற்றது பற்றிய கடைசிச் செய்திகள் இங்குள்ள கல்வெட்டிலிருந்து தெரிகின்றன. 1820-வரை நகரத்தார் இவ்வூரில் வாழ்ந்தனர். கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, மிதிலைப்பட்டி, செவ்வூர், குழிபிறை முதலிய ஊர்களுக்குக் குடியேறி னர். பூலாங்குறிச்சி: புதுக்கோட்டைத் தனியரசாக இருந்த பகுதிக்கும் இம்மாவட்டத்துக்கும் எல்லையாக அமைந்த காஞ்சாத்துமலையின் அடிவாரம், நாயக்க மன்னர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சேதுபதி இவ்வூர் மறவர் களைத் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பி குதுப்கான் படை களை விரட்டியதாக வரலாறு கூறுகிறது. நகரத்தார்கள் பொருளீட்டியும் அரசியல் செல்வாக் குப் பெற்றும் இவ்வூர்க்குப் பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர். பொறை தட்டவும் உரம் நீக்க உடல்களுக்கு எடுக் கவும் சுற்று வட்டார மக்கள் இங்கு வருகின்றனர். ஊர்ப்பெயர் பூலாஞ்செடியால் ஏற்பட்டது. அருகே பூலாம்பட்டி என்னும் ஊர் உளது. இவ்வூர் குறிச்சி திணையில் அமைந்ததால் பூலாங்குறிச்சி ஆயிற்று. பிள்ளையார்பட்டி: இங்குள்ள கற்பக விநாயகர் கோவில் தமிழ் நாட்டிலுள்ள மிக முக்கியமான கோவில் களுள் ஒன்று. இத்தலத்தைப்பற்றி,திரு.சா.கணேசன் ஒரு நூல் எழுதியுள்ளார். குகைக் கோவிலுள், விநாயகர் உருவம் குடையப் பட்டிருக்கிறது. இந்தக் குகைக்கோயில் 5-ஆம் நூற்றாண்