இராம்நாத சகாயம் S. Ramanatha Sethupathy, RAJAH OF RAMNAD. HEREDITARY TRUSTEE AND CHAIRMAN RAMESWARAM DEVAST ANAM AND HEREDITARY TRUSTEE RAMNAD SAMASTHANAM DEVASTHANAMS AND CHATRAMS. சிறப்புரை உலகஞ்சுற்றிய தமிழன் என்ற ஊன்றிய புகழுடையவரும். தண்டமிழ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளரும், அரும் பெரும் நூல்கள் பல படைத்த அறிவுச் செல்வரும் ஆகிய எனது அன்பிற்குரிய நண்பர், 'சோமலெ அவர்கள், தங்கத் தமிழ்நாட்டின் தனிச்சிறப்புக்களையெல்லாம், மாவட்டம் வாரி யாக, சகலவிதமான புள்ளி விவரங்களோடும், நேரில் சென்று கண்டறிந்த வரலாற்று உண்மைகளோடும், எளிய நடையில் எல்லோரும் படித்து இன்புறத்தக்க வகையில் எழுதியுள்ள மாவட்ட நூல் வெளியீட்டு முயற்சியை மனதாரப் பாராட்டு கிறேன். அதிலும் குறிப்பாக, தமிழ் நாட்டில் எங்கள் மாவட்டமாய் விளங்குகிற இராமநாதபுரம் மாவட்ட நூல், எல்லா வகையிலும் சிறப்புடையதாக அமைந்துள்ளது. ஆசிரியரின் சொந்த மாவட்டமாகவும் இருப்பதால், சமீப காலம் வரை வெளிவராத பல வரலாற்றுண்மைகளையெல் லாம் அவர்கள் சேகரித்து எழுத முடிந்தது போலும்! இராமநாதபுரம் சீமை என்றும் சேது நாடு என்றும் பேசப் பெறும் இம்மாவட்டம், இராமாயண காலத்திலிருந்தே தமிழும் சமயமும் வளர்த்த தார்வேந்தர் சேதுபதி மரபினரின் ஆட்சியால், பல முன்னேற்றங்களைக் கண்ட நாடு. சேதுபதி மரபில் தோன்றிய நானே இன்றுவரை அறிந்திராத பல வரலாற்றுண்மைகளை, ஆசிரியர் இந்நூலில் குறிப்பிட்டி ருப்பது பாராட்டுதற்குரியது. பாரத நாட்டில், உலகமெங்கும் புகழ்பெற்ற ஒரு மாவட்டம் உண்டெனில், அது நமது முகவை மாவட்டமே யாகும். இராமநாதபுரம் என்ற சொல்லுக்கு, வீரமறவர் "படைவீடு" என்ற விளக்கம் புதுமையும் சிந்தனையும்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/4
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை