399 கொங்கு நாச்சியம்மனுக்கு, காட்டுக்குள் கோவில் இருக்கிறது. வைகாசி 4ஆவது செவ்வாயில் திருவிழா நடைபெறுகிறது. பிள்ளையார்பட்டிப் பாறைக்கல் உறுதியானது. கல் வேலைக்கு ஏற்றது. மலையாள நாட்டுத் துறவிகள் இவ்வூரில் நடத்திவரும் நாராயண நாராயண ஆசிரமம், வாதம் முதலிய நோய்களுக்குத் தைலம் லேகியம் வழங்கித் தமிழ் நாடெங்கும் புகழ்பெற்றிருக்கிறது. வேலங்குடி: நகரத்தார் வரலாறு பற்றிய பழமை யான கல்வெட்டு உள்ள ஊர். காட்டுவளமும் மலை மீட்டர். வளமும் உடையது. மலையின் உயரம் 14 இவ்வூர் வழியே மதுரை-புதுக்கோட்டைச் சாலையை ராணி மங்கம்மாள் அமைத்தாள். அது ஆங்கிலேயர் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டு, அண்மையில் புதுப் பிக்கப் பெற்றிருக்கிறது. . மிதிலைப்பட்டி: திருச்சி மாவட்டத்தில் ஒரு பகுதியும் இம்மாவட்டத்தில் ஒரு பகுதியுமாக உள்ளது. கவிராயர் களால் புகழ்பெற்றது. விவரம் செட்டிநாடும் தமிழும் என்ற நூலிற் காண்க. செவ்வூர்: மிதிலைப் பட்டி போல இவ்வூரும் முன்னா ளில் கவிராயர்களாலும் இப்போது நகரத்தாராலும் புகழ்பெற்றது. துவார்: சிவன்கோவில் புகழ் பெற்றது. இங்கு வழிபடுவோர், தம் மக்களுக்கு வள்ளியப்பன் பெயரிடுவர். எனப் பரியாமருந்துபட்டி: சிவகங்கைச் சமஸ்தானத்தைச் சேர்ந்த மருந்தீசர் கோவில் உளது. மருதப்பர் என்ற வழக்கும் உண்டு. இது ஆற்றல்மிக்க தெய்வம். ஆனி மாதத்தில் தேர் விழா நிகழ்கிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/401
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை