பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 இந்தக்கோவிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. ராஜராஜ சோழன் கல்வெட்டு ஒன்று உளது, திருமெய்யம் கோவிலுக்கும் இக்கோவிலுக்கும் இருந்த வழக்கை ஹோய்சாள மன்னர் வீரசோமேசுவரன் தீர்த்து வைத்ததாகச் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இவற்றிலிருந்து இக்கோயில் ராஜராஜன் காலத்திற்கு முன்னரே புகழ் பெற்றிருந்தது தெரிகிறது. திருக்கோட்டியூர் மகாத் மியம் இக்கோவிலைப்பற்றி பல விவரங்களைத் தெரிவிக் கிறது. J சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் திருப்பத்தூர் வட்டத்து வளமான ஒன்றியம் இது. 1960-இல் தோன்றிய இந்த ஒன்றியம் 148 சதுரமைல் பரப்பு உடையது. மக்கள் தொகை 73,155(1961). . வடக்கே மருங்காபுரி (திருச்சி மாவட்டம்), மேற்கே கொட்டாம்பட்டி (மதுரை). தெற்கே சிவகங்கை, கிழக்கே திருப்பத்தூர், வடகிழக்கே பொன்னமராவதி (திருச்சி) ஒன்றியங்கள் சூழ இது அமைந்திருக்கின்றது. ஒன்றியத்துக்குள் பிரான்மலை உள்ளது. ஒன்றியத்தின் அலுவலகங்கள் சிங்கம்புணரி சஞ்சீவி மலையில் பாலாற்றின் கரையில் கட்டப்பெற்றுள. சிங்கம்புணரி பேரூராட்சி மன்றமும் 36 ஊராட்சி மன்றங்களும் அடங்கிய இவ்வொன்றியம் வாராப்பூர் ஜமீன் பிர்க்கா. சதுர்வேத மங்கலம் ஜமீன்பிர்க்கா; மாத்தூர் ஜமீன்பிர்க்கா, திருக்கோஷ்டியூர் ஜமீன் பிர்க்கா ஆகியவற்றின் ஊர்களை உடையது. பறம்புமலை (பிரான்மலை)யைச் சுற்றி எல்லாத் திக்கு களிலும் இவ்வொன்றியத்து ஊர்கள் உள்ளன. இவ்