பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 போலப் பரவிற்று. இதைத் தடுக்கும் முயற்சிகளை மேற் கொண்டபோது, சேதுபதியின் நாட்டில் அருளானந்தர் தலையும் உடலும் வெவ்வேறாயின. இதைக் குறித்து இரு கொள்கைகள் நிலவுகின்றன. கிழவன் சேதுபதி சமயக் காழ்ப்பு இல்லாதவன் சைவ சமயப்பற்று மிக்கவன், வழி வழியாக இராமே சுவரம் கோவிலில் ஈடுபாடும் கடமை உணர்ச்சியும் உடையவன், எனவே பிற மதங்களை ஆதரிக்க வேண்டு மென்று கிழவனிடமோ வேறு சேதுபதியிடமோ எதிர் பார்க்கக்கூடாது. பிறிதொரு சமயம் தம் நாட்டில் கால் கொள்ள வாய்ப்பு நல்காதது சேதுபதிகளின் குற்ற மாகாது, இது சேதுபதிகளுக்கு ஆதரவாகக் கூறப்படும் கருத்து. சே துபதிகள் பல மனைவியரை மணந்து வந்தனர். மறவர் தலைவர் பலரிடமும் இவ்வழக்கம் நிலவிற்று. கிறித்தவம் பரவினால் இவ்வழக்கத்தைக் கைவிட நேரிடும். மந்திரங்காளலும் புதிய மருத்துவ முறை காளலும் கிறித்தவ சாமியார்கள் மக்களிடம் செல்வாக் குப் பெற்று வந்தனர். இதை விட்டு வைத்தால், சேதுபதிகளின் செல்வாக்கு ஆட்டங்கண்டு விடும். இவ்விரு காரணங்களைக் குறித்தே. கிழவன் சேதுபதி கிறித்தவ சமயம் பரவுவதைத் தடுக்க முயன்றான். இது கிறித்தவர்கள் எழுதி வைத்திருக்கும் கருத்து. இவ்விரு கருத்துக்களிலும் ஓரளவு உண்மை உண்டு. கிழவன் சேதுபதிக்குப்பின் பட்டத்திற்கு வந்த விஜயரகுநாத சேதுபதி என்பான் இராமேசுவரம் கோவிலில் உள்ளப்பற்று உடையவனாக இருந்தனன், இராமேசுவரத்திற்குச் செல்லும் யாத்திரீகர்கள் பாம்ப னைக் கடப்பதற்குப் படகில் செல்லும்போது அவர்களுக்கு .