408 வாக்கித் திருப்பணி செய்யப் பெற்றதாய்க் கல்வெட்டுக் களிலிருந்து தெரிகிறது. அமைப்பாக உள்ள இக்கோயில் இருப்பதே பலர்க்குத் தெரியவில்லை. சாலையில், மங்கள கணபதி விக்கிரகத்துக்கருகே ஓர் அறிவிப்புப் பலகை போடுவது நன்று. பொள்ளாச்சிக்கு அடுத்தபடி வேர்க்கடலை வாணி பத்தில் பெரிய சந்தை சிங்கம்பிடாரியே. இவ்வூர் முத்து வடுகு வாத்தியார் வாக்குப் பலிதம் உடையவராய் இருந்தாராம். அவர் அடங்கியுள்ள இடத்தில் வெள்ளிக் கிழமைதோறும் பூசையும் சித்திரா பவுர்ணமியன்று பெரிய விழாவும் நடைபெறுகின்றன. சிங்கம்புணரியில் இளமுகர் என்ற அம்பலகாரர் மிகுதியாக வாழ் கின்றனர். . இருப்பவை: ஊராட்சி மன்ற ஒன்றியம், சஞ்சீவி மலையில் விநாயகர் கோயில், நாடார் பேட்டை, கயிறு பின்னும் தொழில், கடலை அறைக்கும் ஆலைகள், சோமசுந்தரம் தியேட்டர், கூட்டுறவு மார்க்கட்டிங் சொசைட்டி, கால்நடை மருத்துவமனை, தொலை பேசி இணைப்பு நிலையம், ஆவணக்களரி, தச்சுத் தொழிற் சாலை, தென்னை நாற்றுப் பண்ணை. இல்லாதவை: போலீசு நிலையம். இவ்வூரின் ஏற்றுமதி: மணிலாக்கடலை, கடலை எண் ணெய், கடலைப் பொட்டு (உமி), தேங்காய், கேரளத் துக்குப் பொறி, கயிற்றுப் பொருள்கள். சந்தை நாள்: வியாழக்கிழமை. மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேவ யாவும் சிங்கம்பிடாரியி கோட்டை, ஆகிய நகர்கள் யாவும் லிருந்து 36 மைல் (58கி.மீ) தொலைவில் உள்ளன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/410
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை